தருமபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் பகுதி அருகே இன்று மாலை 5 மணியளவில் நெல் மூட்டை ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி வந்த லாரி ஒன்று, நிலை தடுமாறி முன்னே சென்று கொண்டிருந்த லாரிமீது தாறுமாறாக மோதியது. அந்த லாரி, தனக்கு முன்னே சென்று கொண்டிருந்த கார், மற்றொரு லாரி ஆகியவற்றின்மீது மோதியது. இந்தக் கோர விபத்தில் சிக்கிய லாரிகளில் ஒன்று, பாலத்திலிருந்து கீழே விழுந்து நொறுங்கியது.
மேலும், விபத்தில் சிக்கிய காரில் இருந்த ஓர் ஆண், பெண், ஒரு குழந்தை என மூன்று பேர் காரிலேயே உடல் கருகி இறந்தனர். இது குறித்து தகவலறிந்த தருமபுரி மாவட்ட எஸ்.பி, மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டனர்.

மேலும் தீ விபத்து ஏற்பட்ட வாகனத்தை தீயணைப்புத்துறையினர் அணைத்ததுடன், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
#Horrible_Accident தர்மபுரி தொப்பூர் அருகே இன்று மாலை ஏற்பட்ட கோர விபத்து… மூன்று பேர் பலி!#accident #Video #dharmapuri #Fire pic.twitter.com/LhBflGGdmk
— Se.Balajee (@Se_Balajee) January 24, 2024
இதுவரை இந்த விபத்தில் 8 பேர் பலத்தக் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சம்பவ இடத்தை அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் நேரில் பார்வையிட்டு வருகின்றனர். இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில், வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.
இந்தக் கோர விபத்து, அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.