வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஐதராபாத்: தெலுங்கானாவில் அரசு உயரதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தி கணக்கில் வராத ரொக்கப்பணம், ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
தெலுங்கானாவில் ரியல் எஸ்டே் ஒழுங்குமுறை ஆணைய செயலராக இருப்பவர் சிவபாலகிருஷ்ணன். இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.
இந்நிலையில் இவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் கட்டுகட்டாக பணம், ஆவணங்கள் சிக்கின. ரொக்க பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கேயே எண்ணினர்.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புபோலீசார் கூறுகையில், சிவபாலகிருஷ்ணன் இதற்கு முன் இவர் ஐதராபாத் பெருநகர வளர்ச்சி குழும இயக்குனராக இருந்தார். தற்போது ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியதில் பெருமளவு ஊழல் நடந்துள்ளதையடுத்து நடத்திய சோதனையில் ரூ. 100 கோடி வரை லஞ்சம் பணம் சிக்கியது என்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement