Missile attack on merchant ship carrying 22 Indians in Gulf of Aden: | ஏடன் வளைகுடாவில் 22 இந்தியர்களுடன் சென்ற வணிக கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: ஏடன் வளைகுடாவில் இந்தியர்களுடன் சென்ற வணிக கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. சம்பவ இடத்திற்கு இந்திய கப்பற்படை கப்பல் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏடன் வளைகுடா உள்ளிட்ட பகுதிகளில் வரும் வணிக கப்பல்கள் மீது தாக்குதல்கள் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. இதனை சர்வதேச நாடுகள் தடுக்க நடவடிக்கை எடுத்தும் வருகிறது.

இந்நிலையில் மார்லின் லாண்டா என்ற வணிக கப்பல் 22 இந்தியர்கள், 1 வங்கதேச நாட்டவர் ஒருவருடன் ஏடன் வளைகுடா பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது கப்பல் மீது திடீரென ஏவுகணை தாக்குதல்கள் நடந்தன. இதில் கப்பல் தீப்பற்றி எரிய துவங்கியது.

இதில் கப்பலில் சிக்கியுள்ளவர்கள் எஸ்.ஓ.எஸ்., மூலம் தெரிவித்த தகவலின் படி ஆந்திராவின் விசாப்பட்டினத்திலிருந்து நம் கப்பற்படை கப்பல், வணிக கப்பலுக்கு உதவி செய்ய சம்ப இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.