டபுள் டக்கரில் அனிமேஷன் கேரக்டர்கள்

ஏர் பிளிக் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் படம் டபுள் டக்கர். தீரஜ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், ஸ்மிருதி வெங்கட் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், யாஷிகா ஆனந்த், காளி வெங்கட், கருணாகரன், முனிஷ்காந்த், சுனில் ரெட்டி, ஷாரா உள்பட பலர் நடிக்கிறார்கள். வித்யாசாகர் இசை அமைக்கிறார். கவுதம் ஒளிப்பதிவு செய்கிறார்.

அறிமுக இயக்குனர் மீரா மஹதி இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது “சிறந்த கதைகள் கொண்ட தரமான படங்களுக்கு, விமர்சகர்கள் மற்றும் பொது பார்வையாளர்களிடம் எப்போதும் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக, அனைத்து வயதினரும் ரசிக்கும் வகையிலான படங்களை, ரசிகர்கள் கொண்டாடத் தவறியதேயில்லை. அந்த வரிசையிலான படம் இது.

படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்த படத்தில் ஹீரோ தீரஜூடன் இரண்டு அனிமேஷன் கேரக்டர்கள் நடிக்கிறது. இது தமிழ் சினிமாவின் புதிய முயற்சி. இதற்கான கிராபிக்ஸ் பணிகளும் வேகமாக நடந்து வருகிறது” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.