வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ரஷ்யாவுக்கான இந்திய தூதராக அபய் தாக்கூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: தற்போது ரஷ்யாவுக்கான இந்தியாவின் தூதராக இருந்த பவன் கபூர் வெளிவிவகார அமைச்சகத்தின் புதிய செயலாளராக மேற்கு பிராந்தியத்திற்கும் ஆஸ்திரியா தூதராக இருந்த ஜெய்தீப் மசூம்தார் வெளிவிவகார அமைச்சகத்தின் புதிய செயலாளராக கிழக்கு பிராந்தியத்திற்கும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் அபய் தாக்கூர், ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெற்ற போது தலைவர்களிடையே நடந்த முக்கிய பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்காற்றியவர். இவர் ஒரு பொறியியல் பட்டதாரி.கடந்த 1992-ம் ஆண்டு ஐ.எப்.எஸ் கேடரை சேர்ந்தவர். முன்னதாக இவர் மொரிஷியஸ் மற்றும் நைஜீரியா நாடுகளுக்கான இந்திய தூதராகவும் வெளியுறவு அமைச்சகத்தில் இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார். ரஷ்ய மொழி பேசுவதிலும் திறன் பெற்றுள்ளார் .
ஆஸ்திரியாவிற்கான இந்திய தூதராக உள்ள மசூம் தார்-க்கு பதிலாக தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டில் தூதராக பணியாற்றி வரும் ஷம்புகுமரன் ஆஸ்திரியா நாட்டிற்காக இந்திய தூதராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல துறையின் செயலாளராக அபூர்வா சந்திரா நியமனம்.
தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலாளராக சஞ்சய் சாஜூ நியமிக்கப்பட்டு உள்ளார்.
உத்தரகண்ட் மாநில கேடரை சேர்ந்த சுக்பீர் சந்து ஊழல்எதிர்ப்பு விசாரணைஅதிகாரியாக (லோக்பால் செயலாளராக) நியமிக்கப்பட்டு உள்ளார்.
அசாம்-மேகாலயா கேடரை சேர்ந்த ஆஷிஷ்குமார் பூடானி கூட்டுறவு அமைச்சகத்தின் செயலாளராக நியமனம்.
எல்லை மேலாண்மை துறை செயலாளராக மூத்த அதிகாரி ராஜ்குமார் கோயல் நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும் பல்வேறு துறைகளுக்குமான அதிகாரிகளும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement