ஜார்க்கண்ட்டில் ஆளும் கூட்டணி அரசு தப்புமா? – இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

ராஞ்சி,

ஜார்க்கண்ட்டில் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்-மந்திரியாக ஹேமந்த் சோரன் செயல்பட்டு வந்தார்.

அதேவேளை, நிலமோசடி மூலம் கோடிக்கணக்கில் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 31ம் தேதி ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்தது. இதையடுத்து, ஜார்க்கண்ட் புதிய முதல்-மந்திரியாக சம்பாய் சோரன் பதவியேற்றார்.

அதேவேளை, சம்பாய் சோரன் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், சம்பாய் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. ஜார்க்கண்ட் சட்டசபையில் மொத்தம் 80 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க 41 உறுப்பினர்கள் ஆதரவு அவசியம்.

அதேவேளை, காங்கிரஸ் – ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் பெரும்பான்மையுடன் உள்ளதால் சம்பாய் சோரன் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிச்சயம் நிரூபிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.