வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்கள் உயிரிழப்பு தொடர்கிறது. புருடே பல்கலையில் பட்ட மேற்படிப்பு படித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர், இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இது சக மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த வாரம், ஸ்ரேயாஸ் ரெட்டி என்ற மாணவர், சின்சினாட்டியில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். பிறகு, விவேக் சைனி (25) என்ற மாணவர், அமெரிக்காவை சேர்ந்த நபரால் ஜார்ஜியாவில், கொடூரமாக தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்தார்.
இதில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. தொடர்ந்து, புருடே பல்கலையில் படித்த நீல் ஆச்சார்யா என்ற மாணவர் கல்லூரி வளாகத்தில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
இந்நிலையில், புருடே பல்கலையில் படித்து வந்த சமீர் காமத் (25) என்ற மாணவரும் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவர், 2023ம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் பிரிவில் பட்டமேற்படிப்பு முடித்துள்ளார். தொடர்ந்து அதே பிரிவில் உயர்கல்வி படித்து வந்தார். காமத் அமெரிக்க குடியுரிமையும் பெற்றுள்ளார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement