வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: வன்னியர் சங்க கட்டடத்துக்கு தமிழக அரசு சீல் வைத்த விவகாரத்தில் வன்னியர் சங்கத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
பரங்கிமலையில் உள்ள 41,952 சதுர அடி நிலத்தை தற்காலிகமாக பயன்படுத்த காசி விஸ்வநாதர் தேவஸ்தானத்துக்கு அரசு அனுமதி அளித்திருந்தது. தேவஸ்தானத்துக்கு தற்காலிகமாக தந்த இடத்தை வன்னியர் சங்க கட்டடமாக கட்டப்பட்டு அலுவலகமாக செயல்பட்டு வந்தது. நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகளுக்கு பல்லாவரம் தாசில்தார் நோட்டீஸ் அனுப்பி சீல் வைக்கப்பட்டது.
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வன்னியர் சங்கம் முறையிட்டது. அப்போது வன்னியர் சங்கத்திற்கு ஆதரவாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இந்த மனு இன்று (பிப்.,9) நீதிபதி பி.எஸ்.நரசிம்மா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆக்கிரமிப்பில் உள்ள நிலம் யாருடைய இடம் என்பதை கண்டறிய வேண்டியுள்ளது எனக்கூறி வன்னியர் சங்கம், காசி விஸ்வநாதர் கோயில் நிர்வாகம், போலீஸ் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement