An Indian-origin man has died after being attacked by unidentified men in the US | அமெரிக்காவில் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்: அமெரிக்காவில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு பலத்த காயம் அடைந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவன இணை நிறுவனர் விவேக் தனேஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் விவேக் தனேஜா(41). விர்ஜினியாவில் வசித்து வருகிறார். இவர் டைனமிக் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார். இந்த நிறுவனம், அமெரிக்க அரசுக்கு தொழில்நுட்ப தீர்வுகள் மற்றும் தரவுகளை பகுப்பாய்வு செய்து வழங்கி வருகிறது. விவேக் தனேஜா, கடந்த2ம் தேதி வாஷிங்டன்னில் உள்ள ஜப்பானிய உணவகத்தில் சகோதரிகளுடன் உணவருந்தி திரும்பிவிட்டு மர்ம நபரால் கொடூரமாக தாக்கப்பட்டார்.

அதில், பலத்த காயம் அடைந்து, சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவேக் தனேஜா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே, சம்பவம் நடந்த இடத்தில் இருந்த இடத்தில் பதிவான சிசிடிவி கேமராக்களை வைத்து குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர். அவரைப் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு 25 ஆயிரம் டாலர் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் படித்த இந்திய மாணவர்கள் அடுத்தடுத்து தாக்குதலுக்கு உள்ளாகியும், மர்மமான முறையில் இறந்து வரும் நிலையில், விவேக் தனேஜாவும் தாக்கப்பட்டு உயிரிழந்தது இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.