மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட வேண்டும்.

மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட வேண்டும் என்று நீர் வழங்கள் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று (09) இரண்டாவது நாளாகவும் நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையிவ்…

மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் 2 லட்சத்து 51 ஆயிரம் குடும்பங்கள் வாழ்கின்றன, சுமார் 66 ஆயிரம் வீடுகளே அமைக்கப்பட்டுள்ளன. ஏனைய குடும்பங்களுக்கு வீட்டுப் பிரச்சினை உள்ளன. இப்பிரச்சினையை தீர்க்க வேண்டுமெனில் காணி உரிமை வழங்கப்பட வேண்டும். மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்க நாட்டு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என அண்மைய ஆய்வுகள் – கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. 

மலையக பெருந்தோட்ட மக்கள் இந்நாட்டுக்காக உழைத்துள்ளனர்.  1964 இல் எமது மக்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். எனவே, காணி உரிமையை நாம் பிச்சையாக கேட்கவில்லை, அது எமக்கு கிடைக்க வேண்டிய உரிமையாகும். எமது மக்கள் மானத்துடனும், மரியாதையுடனும் வாழவே விரும்புகின்றனர், என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.