பெங்களூரு: கர்நாடகாவில், 6,407.82 கோடி மதிப்பிலான, 128 முதலீட்டு திட்டங்களுக்கு கர்நாடக அரசு நேற்று ஒப்புதல் அளித்தது.
கனரக தொழில்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தலைமையில், 143வது மாநில அளவிலான முதலீடு ஒப்புதல் குழு கூட்டம், பெங்களூரில் நேற்று நடந்தது.
கூட்டத்தில், 6,407.82 கோடி முதலீட்டில் 128 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 33,771 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
பெங்களூரு ரூரல், பெலகாவி, ராம்நகர், மைசூரு ஆகிய மாவட்டங்களில் பல்வேறு மூலதன முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் கல்வி-ஆராய்ச்சி நிறுவனங்கள், கிடங்குகள், குளிர்பதன கிடங்குகள், வாகன உதிரிபாகங்கள், பி.வி.சி., குழாய் உற்பத்தி உட்பட பல்வேறு தொழில் நிறுவனங்கள் அமையஉள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement