புதுடில்லி : எதிர்காலத்தில் தொற்று நோய்களை திறம்பட சமாளிக்க, தொற்று நோய்கள் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என, சட்டக் கமிஷன் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துஉள்ளது.
நாட்டில், தொற்று நோய்களை எதிர்த்து போராட, 1897ல் சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த சட்டம், கொரோனா பரவிய, 2020ல் தான் திருத்தம் செய்யப்பட்டது.
இந்நிலையில், தொற்று நோய்கள் சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து, சட்டக் கமிஷன் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையிலான கமிட்டி ஆய்வு செய்தது.
அதன்படி, இக்குழு தன் பரிந்துரைகளை, மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம்மேக்வாலுக்கு நேற்று முன் தினம் அனுப்பியது.
அதில், தற்போதைய காலத்துக்கு ஏற்றபடி, தொற்று நோய்கள் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும், சட்டத்தில் சில குறைபாடுகள் இருப்பதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
மேலும், எதிர்காலத்தில் தொற்று நோய்களை திறம்பட சமாளிக்க, சட்டத்தில் உரிய திருத்தம் செய்ய வேண்டும் என்றும் சட்டக் கமிஷன் பரிந்துரைத்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement