ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் நேற்று (14) நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணித்தலைவர் முதலில் துடுப்பெடுத்தாடியதுடன், 49 ஓவர்களில் அனைவரும் ஆட்டமிழந்து 266 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டனர்.
துடுப்பாட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக Rahmat Shah 65 ஓட்டங்களையும், Azmatullah Omarzai 54 ஓட்டங்களையும், Rahmanullah Gurbaz 48 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை அணி சார்பில் பிரமோத் மதுஷன் 3 விக்கெட்டுகளையும், அசித்த பெர்னாண்டோ, துனித் வெல்லாலகே, அகில தனஞ்சய ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 35 ஆவது ஓவரில் 3 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 267 ஓட்டங்களைப் பெற்று போட்டியின் வெற்றியை பதிவு செய்தனர். இலங்கை அணி சார்பாக அவிஷ்க பெர்னாண்டோ 91 ஓட்டங்களையும், பெத்தும் நிஸ்ஸங்க 118 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 40 ஓட்டங்களையும் பெற்றனர்.
அதன்படி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 3-0 என்ற கணக்கில் அபார வெற்றியை பதிவு செய்தது. இறுதிப் போட்டியில் மற்றும் போட்டியின் நாயகனாக பெதும் நிஸ்ஸங்க தெரிவானார்.