மஹரகம பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் அரச சேவைகள் தொடர்பான விசேட ஒரு நாள் நடமாடும் சேவை நிகழ்ச்சி (17) ருக்மல்கமவில் இடம்பெற்றது.
இதன்போது அஸ்வெசும திட்ட அதிகாரிகளிடம் தமது பிரச்சினைகளை முன்வைக்க வந்த பொதுமக்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, கொழும்பு மாவட்ட செயலாளர் கே.ஜி.விஜேசிறி, மஹரகம பிரதேச செயலாளர் தில்ருக்ஷி வல்பொல உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.