Sarfaraz Khan, IPL 2024: இந்திய கிரிக்கெட் அணி தற்போது பெரிய மாற்றத்திற்கு உள்ளாகி வருகிறது. டி20 அணி ஏற்கெனவே பல மாற்றங்களை சந்தித்துவிட்ட நிலையில், ஓடிஐ உலகக் கோப்பை தொடருக்கு பின் ஓடிஐ அணியிலும் சில மாற்றங்களும் நிகழ்ந்தன.
தற்போது டெஸ்ட் அணியை எடுத்துக்கொண்டால் புஜாரா, ரஹானே ஆகியோர் அணியில் வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், விராட் கோலியும் தனிப்பட்ட காரணங்களுக்காக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலக இந்திய அணியின் மிடில் ஆர்டரே தற்போது ஒட்டுமொத்தமாக மாறியுள்ளது.
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவை தவிர சுப்மான் கில், ரஜத் பட்டிதார், சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரேல் என பெரிதும் இளம் வீரர்களே இருந்தனர். இருந்தும், இந்திய அணி இமலாய வெற்றியை பெற்றிருக்கிறது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரண்டாவது இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்திருந்தார். சுப்மான் கில் இரண்டாவது இன்னிங்ஸில் 91 ரன்களை அடித்திருந்தார். துருவ் ஜூரேலும் முதல் இன்னிங்ஸில் நல்ல ஷாட்களை அடித்திருந்தார்.
குறிப்பாக, சர்ஃபராஸ் கான் ஒருவர்தான் முதல் போட்டியிலேயே இந்திய அணியின் தேர்வர்களுக்கு தனது திறமையை வெளிப்படுத்திவிட்டார் எனலாம். இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் கடந்த மிரட்டிய சர்ஃபராஸ் கானை கிரிக்கெட் உலகமே திரும்பி பார்க்கிறது. முதல் தர போட்டிகளில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் அதே தாக்கத்தை ஏற்படுத்துவார் என பலராலும் நம்பப்படுகிறது.
சர்ஃபராஸ் கான் இந்திய மண்ணில் ஒரு சிறப்பான பேட்டராக உருவெடுத்திருக்கிறார். எனவே, சர்ஃபராஸ் கானின் ஆட்டம் ரசிகர்களையும், வல்லுநர்களையும் ஒருங்கே கவர்ந்திருக்கிறார். அந்த வகையில், ஐபிஎல் தொடரிலும் சர்ஃபராஸ் கம்பேக் கொடுப்பாரா என ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகளுக்காக ஐபிஎல் தொடரிலும் சர்ஃபராஸ் கான் விளையாடி உள்ளார்.
கடந்த 2023ஆம் ஆண்டு வரை டெல்லி அணியில் இருந்த அவரை கடந்த ஏலத்தில் டெல்லி விடுவித்தது. அவரை ஏலத்தில் யாரும் எடுக்காத நிலையில் அவர் இந்த முறை ஐபிஎல் போட்டியை விளையாட மாட்டார் என தெரிகிறது. யாருக்காவது காயம் ஏற்பட்டாலே ஒழிய அவர் ஐபிஎல் விளையாடுவது சிரமம். இருப்பினும், சர்ஃபராஸ் கானின் சேவை ஐபிஎல் தொடரில் எந்த அணிக்கு தேவை என்பதை இதில் காணலாம்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கேகேஆர் அணிதான் டாப் ஆர்டரில் சொதப்பலான பேட்டர்களை வைத்துக்கொண்டு தொடர்ந்து மோசமாக விளையாடி வரும் அணியாக இருக்கிறது. சர்ஃபராஸ் கானை எடுப்பதன் மூலம் கேகேஆர் அணிக்கு மிகுந்த பலன்கள் கிடைக்கும்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
பேட்டிங்கில் ஏற்கெனவே ராயல் சேலஞ்சர்ஸ் அணி பலம்தான் என்றாலும், சர்ஃபராஸ் கான் மிடிலில் இன்னும் கூடுதல் நம்பிக்கையை அளிப்பார். சர்ஃபராஸ் அணி பெங்களூருவை ஒரு காலத்தில் விடுவித்த அணியாக இருந்தாலும், விஸ்வரூபம் எடுத்து நிற்கும் சர்ஃபராஸ் கானை சேர்ப்பது அவர்களின் கனவுகளையும் நிறைவேற்றும்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
தோனிக்கு இதுதான் கடைசி சீசன் என தெரிவிக்கப்படுகிறது. அந்ச வகையில் அவருடைய பேட்டிங்கில் இடத்தில் சர்ஃபராஸ் கான் போன்ற வீரரை வைத்திருப்பது பெஸ்ட் ஆப்ஷன். தோனியும் அதை விரும்புவார். ஒருவேளை, சர்ஃபராஸ் கான் தொடர்ந்து செயல்படும்பட்சத்தில் அவர் ஐபிஎல் அணிக்கு ஏலம் போகலாம். அந்த நாள்கள் வெகு தூரத்தில் இல்லை.