வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: அமெரிக்க லாட்டரி குலுக்கலில் ஒருவருக்கு 340 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு ( இந்திய மதிப்பில் ரூ.2,800 கோடி) கிடைத்துள்ளது. ஆனால், அது அந்த லாட்டரிக்கு தவறாக பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு உள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்து, வாங்கியவருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இதனையடுத்து அவர் நீதிமன்றத்தை நாடி உள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த பவர்பால் லாட்டரி நிறுவனம் பல்வேறு மெகா பரிசுகளுடன் குலுக்கல்களை நடத்தி வருகிறது. அந்த வகையில், 2023 ஜன.,6 அன்று ஜான் சீக்ஸ் என்பவர், லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கி உள்ளார். குலுக்கலில் அந்த டிக்கெட்டுக்கு ரூ.2,800 கோடி பரிசு வென்றதாக பவர்பால் லாட்டரி இணையதளத்தில் அறிவிப்பு வெளியானது.
இதனையடுத்து, மறுநாள் ஜான் சீக்ஸ் பவர்பால் நிறுவனத்தை அணுகி உள்ளார். ஆனால், தவறுதலாக, அந்த டிக்கெட் எண் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டதாக விளக்கம் அளித்தனர். ஆனால், இதனை ஜான் சீக்ஸ் ஏற்கவில்லை. லாட்டரி நிறுவனமும் தங்களது கருத்தில் உறுதியாக இருந்தது.
இதனையடுத்து, ஜான் சீக்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனை விசாரித்த நீதிபதி வழக்கை வரும் 23 ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement