2 years on: Well keep helping Ukraine: UK PM vows | 2 ஆண்டுகள் நிறைவு: “உக்ரைனுக்கு தொடர்ந்து உதவுவோம்”: பிரிட்டன் பிரதமர் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கீவ்: உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் துவங்கி, இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகிறது. உக்ரைனுக்கு தொடர்ந்து உதவுவோம் என பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உறுதி அளித்துள்ளார்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து உள்ளது. இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவு பெற்றது. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் தீவிரமாக போரிட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன் ரஷ்யாவிற்கு எதிராக, பல பொருளாதார மற்றும் வர்த்தக கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசு கொண்டு வந்தது.


உக்ரைனுக்கு ஆதரவு

இந்நிலையில் இன்று பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கூறியிருப்பதாவது: போர் துவங்கி 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ரஷ்யாவின் ஆதிக்க மனப்பான்மையை எதிர்க்கும் நிலைப்பாட்டில் பிரிட்டன் மேலும் உறுதியாக உள்ளது.

என்றுமே சர்வாதிகாரம் வெற்றி பெறுவதில்லை. நாங்கள் இன்றும் உக்ரைன் பக்கமே நிற்கிறோம். தொடர்ந்தும் நிற்போம். இதற்காக எத்தனை நாட்கள், என்னென்ன செய்ய வேண்டுமோ, அனைத்தையும் செய்வோம். இவ்வாறு ரிஷி சுனக் கூறியுள்ளார்.

ரஷ்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த உக்ரைன்

ரஷ்யாவின் முன் எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு விமானத்தை உக்ரைன் படைகள் சுட்டு வீழ்த்தி உள்ளது. விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் கூறியது குறித்து ரஷ்ய ராணுவம் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.