7 இருக்கை அல்கசாரின் அறிமுகம் விபரத்தை உறுதி செய்த ஹூண்டாய்

கிரெட்டாவின் அடிப்படையில் 7 இருக்கை பெற்ற ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவியின் (Hyundai Alcazar) 2024 ஆம் ஆண்டிற்கான மாடலை அடுத்த மூன்று மாதங்களுக்குள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

தற்பொழுது சந்தைக்கு வந்த புதிய கிரெட்டா தொடர்ந்து அமோகமான வரவேற்பினை பெற்று 60,000க்கு கூடுதலான முன்பதிவுகளுடன் ஒட்டுமொத்த கிரெட்டாவின் விற்பனை எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்து சாதனை படைத்துள்ளது.

ஹூண்டாயின் 7 இருக்கை பெற்ற அல்கசாரில் தொடர்ந்து 160hp வழங்கும் 1.5 லிட்டர் டர்போ  பெட்ரோல் மற்றும் 115hp வழங்கும் 1.5 லிட்டர் டர்போ டீசல் என இரண்டு என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றங்களும் இருக்காது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற உள்ளது.

2024 மாடலில் மேம்படுத்தப்பட்ட இன்டிரியர் அமைப்பு கிரெட்டாவில் உள்ளதை போன்றே இரு பிரிவுகளை கொண்ட டிஜிட்டல் கிளஸ்ட்டர்  மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் 10.25 அங்குலத்தை பெற்று வயர்லெஸ் சார்ஜிங், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட வசதிகளும் பெறக்கூடும். தோற்ற அமைப்பில் தற்பொழுதுள்ள கிரெட்டாவில் இருந்து பெறப்பட்ட பம்பர் மற்றும் கிரில் அமைப்பில் மாறுதல்களுடன் புதிய அலாய் வீல் கொண்டிருக்கும்.

இந்தியாவில் கிடைக்கின்ற மஹிந்திரா XUV700, டாடா சஃபாரி, எம்ஜி ஹெக்டர் பிளஸ் உள்ளிட்ட மாடல்களுடன் குறைந்த விலை சிட்ரோன் C3 ஏர்கிராஸ் மாடலையும் எதிர்கொள்ளுகின்றது. சந்தையில் உள்ள மாடலை விட கூடுதலான விலையில் எதிர்பார்க்கப்படுவதனால் ரூ.17 லட்சத்தில் 2024 ஹூண்டாய் அல்கசார் விலை துவங்கலாம்.  வரும் மார்ச் 11 ஆம் தேதி பெர்ஃபாமென்ஸ் ரக ஹூண்டாய் கிரெட்டா என்-லைன் விற்பனைக்கு வெளியாகின்றது.

The post 7 இருக்கை அல்கசாரின் அறிமுகம் விபரத்தை உறுதி செய்த ஹூண்டாய் appeared first on Automobile Tamilan.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.