இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா (Vi), ரீச்சார்ஜ் பிளான்களுடன் ஓடிடி சேவைகளையும் சேர்த்துள்ளது. நீங்கள் அமேசான் பிரைம் ஓடிடியில் விரும்பும் படங்களை பார்த்து ரசிக்கலாம். அதற்கேற்ப இப்போது ரீச்சார்ஜ் பிளானுன் கூடுதல் சலுகையாக அமேசான் சந்தாவையும் கொடுத்திருக்கிறது. வோடாபோன் ஐடியா. ஏற்கனவே, அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், Zee5 மற்றும் நெட்பிளிக்ஸ் என ஓடிடி சந்தாக்களை மொபைல் ரீசார்ஜ் திட்டங்களுடன் கொடுக்கும் நிலையில் வோடாபோன் ஐடியாவும் இந்த லிஸ்டில் சேர்ந்துள்ளது. அந்தவகையில் ஒரு ஆண்டுக்கு அமேசான் பிரைம் ஓடிடி சந்தா எந்த திட்டத்தில் கிடைக்கும்? என்பதை தெரிந்து கொள்வோம்.
அமேசான் பிரைம் ஒரு ஆண்டு சந்தா இலவசமாக கிடைக்கும் வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் ரீச்சார்ஜ் பிளான் விலை ரூ.3199. இந்த திட்டத்தில் யூசர்கள் தினசரி அடிப்படையில் 2ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். அத்துடன் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களை இலவசமாக அனுப்பலாம். மேலும் இந்த திட்டத்தில் Vi Movies & TV சந்தாவும் கிடைக்கிறது. அதாவது அமேசான் ஓடிடி சந்தாவுடன் சேர்ந்து இரட்டிப்பு பொழுதுபோக்கைப் பெறுகிறீர்கள். இந்தத் திட்டத்தில் ஹீரோ அன்லிமிடெட், பிங்கே ஆல் நைட், வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் மற்றும் டேட்டா டிலைட்ஸ் போன்ற பலன்களும் கிடைக்கும்.
இதேபோன்ற திட்டத்துடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை நீங்கள் விரும்பினால், அதற்கான ஆப்சனையும் வோடாபோன் ஐடியா கொடுத்திருக்கிறது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 1 வருடத்திற்கு பொழுதுபோக்கு அம்சங்களை பார்த்து ரசிக்க வேண்டும் என்றால் நீங்கள் ரூ.3099 திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம். ரூ.3199 திட்டத்தில் உள்ள மற்ற நன்மைகள் அப்படியே இந்த திட்டத்திலும் இருக்கும். அதனால், உங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வேண்டுமா? அமேசான் பிரைம் வேண்டுமா? என்பதை வாடிகைகயாளராகிய நீங்கள் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும்.