J., the items seized at home will be handed over tomorrow | ஜெ.,வீட்டில் பறிமுதல் செய்த பொருட்கள் நாளை ஒப்படைப்பு – Jayalalitha

பெங்களூரு :தமிழக முன்னாள் முதல்வரான, மறைந்த ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு, கர்நாடகாவில் பல ஆண்டுகளாக நடந்தது. 2016ல் ஜெயலலிதா இறந்த பின், 2017ல் அவர் குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில், ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட, தங்கம், வைரம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களை ஏலத்தில் விடும்படி, பெங்களூரு சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி என்பவர், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி மோகன், இந்த பொருட்களை, கர்நாடகாவில் ஏலம் விடுவதற்கு பதிலாக, மார்ச் 6 மற்றும் 7ம் தேதி தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

‘அன்று தமிழக உள்துறை முதன்மை செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை ஐ.ஜி., ஆஜராக வேண்டும். பொருட்களை எடுத்து செல்வதற்கு, பெட்டிகள், வாகனங்கள் கொண்டு வர வேண்டும்.

‘பொருட்கள் பெற்று செல்வதை, பதிவு செய்ய வீடியோ கிராபர், போட்டோ கிராபரை அழைத்து வர வேண்டும்’ என கடந்த பிப்ரவரி 19ம் தேதி உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி, ஜெயலலிதாவுக்கு சொந்தமான பொருட்கள், நாளை தமிழக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகின்றன.

கர்நாடகாவுக்கு வழக்கு செலவாக கொடுக்க வேண்டிய 5 கோடி ரூபாயை, அன்றைய தினம் தமிழக அரசு செலுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.