France makes abortion a constitutional right | “கருக்கலைப்பு அவரவர் உரிமை” – அங்கீகாரம் வழங்கியது பிரான்ஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பாரீஸ்: கருக்கலைப்பு என்பது அவரவர் தார்மீக உரிமை, என பெண்களுக்கு ஆதரவான சட்டத்தை பிரான்ஸ் நாடு உலகிலேயே முதன் முதலாக பிரகடனம் செய்துள்ளது. அரசியலமைப்பு சட்டத்தில் உரிமை வழங்கும் இதற்கான மசோதா பார்லி.,யில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பெண்கள் கருக்கலைப்பு என்பது உலகம் முழுவதும் அவரவர் நாட்டு மக்கள் மன நிலைக்கு ஏற்றவாறு மாற்று கருத்துக்கள் நிலவுகிறது. இது தொடர்பாக 2022 அமெரிக்காவில் ஒரு வழக்கில் கருக்கலைப்பு அடிப்படை உரிமை இல்லை என்று தீர்ப்பளித்தது.

பிரான்சில் கருக்கலைப்புக்கு ஆதரவாக பெண்கள் அமைப்பினர் குரல் எழுப்பி வந்தனர். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆதரவாக பேசி வந்தார். இந்நிலையில் பிரான்ஸ் பார்லி.,யில் கருக்கலைப்புக்கு அங்கீகாரம் அளித்து அடிப்படை உரிமையாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது. 780 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

உங்கள் உடல் உங்களுக்கே சொந்தம்

உங்கள் உடல் உங்களுக்கே சொந்தம் அதில் யாரும் எந்த முடிவும் செய்ய இயலாது என பிரான்ஸ் பிரதமர் கேப்ரியல் அட்டல் கூறியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.