ஹாவேரி, : ஹாவேரியின் ரெட்டிஹள்ளி பட்டணாவில் பன்றிகள் தொந்தரவு மக்களை வாட்டி வதைக்கிறது. இதே பகுதியில் வசிப்பவர் வீரேஷ் பென்னே. இவரது வீட்டு அருகிலும் பன்றிகளின் தொந்தரவு மிகவும் அதிகம். இது குறித்து பட்டண பஞ்சாயத்திடம், பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. பன்றி தொல்லையால் வெறுப்படைந்த மனைவி, குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
வீரேஷ், பலமுறை அழைத்தும் வராமல் பிடிவாதம் பிடித்தார். இதனால் நேற்று முன்தினம், பட்டண பஞ்சாயத்து அலுவலகம் முன், வீரேஷ் அரை நிர்வாண போராட்டம் நடத்தி, பன்றிகளின் தொந்தரவுக்கு தீர்வு காணும்படி வலியுறுத்தினார். இவரது போராட்டத்தில், அப்பகுதியினரும் பங்கேற்றனர்.
தகவலறிந்து வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., பனகர், பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி, பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வீரேஷ் பென்னேவை சமாதானம் செய்து அனுப்பினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement