ஓடிடியில் நேரடியாக வெளியான ரித்திகா சிங் படம்

ரித்திகா சிங் நடித்துள்ள தெலுங்கு படம் 'வளரி'. இதில் ஸ்ரீகாந்த், உத்தேஜ், சுப்பராஜு, இளவரசி சஹஸ்ரா, பர்னிதா ருத்ர ராஜு உள்பட பலர் நடித்துள்ளனர். மிருத்திகா சந்தோஷினி இயக்கி உள்ளார். விஷ்ணு, ஹரி கவுரா இசை அமைத்துள்ளனர். இந்த படம் நேற்று ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது.

படத்தின் நாயகன் ஸ்ரீகாந்த் கடற்படை கேப்டன். அவர் தனது மனைவி ரித்திகா சிங் மற்றும் மகனுடன் கிருஷ்ணாப்பட்டினத்தில் ஒரு பழைய பங்களாவில் வசித்து வருகிறார். ரித்திகாவிற்கு 13 வயது சிறுவன் தன் பெற்றோர்களை கொல்வது போன்று அடிக்கடி கனவு வருகிறது. அதை தொடர்ந்து பல அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது. தன் மகன் தன்னையும், தன் கணவரையும் கொன்று விடுவனோ அதனால்தான் இந்த கனவு வருகிறதோ என்று ரித்திகா நினைக்கிறார். உண்மையில் அந்த பங்களாவில் என்ன நடந்தது? இது ஸ்ரீகாந்த் குடும்பத்துடன் எப்படி தொடர்புடையது? ரித்திகாவுக்கு ஏன் இப்படி ஒரு வித்தியாசமான கனவு வருகிறது? என்பதுதான் படத்தின் கதை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.