தி.மு.க கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியும், கடந்த தேர்தலில் போட்டியிட்டதைவிட இந்த முறை அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருக்கின்றன. அதன்படி, காங்கிரஸ் பன்னிரெண்டு தொகுதிகள் வரை கேட்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், 5 +1 எனத் தொடங்கி தற்போது 7 + 1 என வந்து நிற்கிறது பேச்சுவார்த்தை. ஆனால், காங்கிரஸ் கட்சியோ கடந்தமுறை போட்டியிட்ட எண்ணிக்கையிலாவது தங்களுக்கு இடத்தை ஒதுக்க வேண்டும் எனக் கேட்கிறது. அதேபோல விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் நான்கு எனத் தொடங்கி தற்போது இரண்டு தனித் தொகுதி ஒரு பொதுத் தொகுதி என வந்து நிற்கிறது. ஆனால், வி.சி.க-வுக்கு கடந்த முறை கொடுத்த இரண்டு தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்துள்ளது தி.மு.க தலைமை. அதில், இரண்டுமே தனித் தொகுதியாகவோ அல்லது ஒன்று தனி மற்றொன்று பொதுத் தொகுதியாகவோ முடிவு செய்துகொள்ளலாம் எனவும் இரண்டுமே பானைச் சின்னத்தில் போட்டியிடலாம் எனவும் சொல்லியிருக்கிறது.
ம.தி.மு.க மற்றும் ம.நீ.ம உடனான பேச்சுவார்த்தையும் முடிவுறும் நிலையில் இருக்கிறது. ஆனால், அவர்கள் தனிச் சின்னத்தில் போட்டியிட விரும்புகிறார்கள். ஆனால், இரண்டு கட்சியையும் உதயசூரியனில் போட்டியிட வைக்கும் முயற்சியில் இருக்கிறது தி.மு.க. இப்போதைக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொ.ம.தெ.க ஆகிய இரண்டு கட்சிகளுக்கு மட்டும்தான் தொகுதிகள் முடிவாகியிருக்கின்றன. அந்த இரண்டு தொகுதியிலும் உதயசூரியனில் போட்டியிடுவதாக முடிவாகியிருக்கிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய சீனியர் அமைச்சர் ஒருவர், “மற்றவர்களைப் போல நாங்களும் கடந்த முறையைப் விட கூடுதல் தொகுதியிலோ அல்லது கடந்த முறை நின்ற எண்ணிக்கையிலோதான் போட்டியிட விரும்புகிறோம். ஆனால், கூட்டணிக் கட்சிகள் கொடுக்கும் அழுத்தம் அவர்களின் கோரிக்கையில் இருக்கும் சில நியாயங்களின் அடிப்படையில் இந்த முறை நாங்கள் சில தியாகங்களைச் செய்ய முடிவு செய்துள்ளோம். சில கூட்டணி கட்சிகளில், அதன் தலைவர்களே போட்டியிடுவதால் அவர்களை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சொல்ல முடியாத நிலை உள்ளது. கடந்த முறை 20 தொகுதிகளில் நேரடியாகவும், 5 தொகுதிகளில் கூட்டணி கட்சியினர் எங்கள் சின்னத்திலும் என 25 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டோம். இந்த முறை நாங்கள் 20 முதல் 22 தொகுதிகளில்தான் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம். இது குறித்த அறிவிப்பைத் தலைமை விரைவில் வெளியிடும்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY