சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சத்யராஜின் மகள் திவ்யா சத்யா, தனியார் மருத்துவமனையில் நடக்கும் மோசடி குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நியூட்ரிஷியனான திவ்யா சத்யராஜ் மகிழ்மதி அமைப்பின் மூலம் தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டிற்குக் கீழ் இருக்கும் மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவு வழங்கப்படுகிறது. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக இருக்கிறார் நடிகர் சத்யராஜ்.
