Rahul sure to lose: Union Minister Anurag Thakur says | ராகுல் தோற்பது உறுதி: சொல்கிறார் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: வரும் லோக்சபா தேர்தலில் ராகுல் தோற்பது உறுதி என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பில் எட்டு மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் போட்டியிட உள்ள, 39 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை அக்கட்சி தலைமை வெளியிட்டது. காங்., முன்னாள் தலைவர் ராகுல், கேரளாவின் வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

இது குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியதாவது: வரும் லோக்சபா தேர்தலில் ராகுல் தான் போட்டியிடும் தொகுதி அல்லது மாநிலத்தை மாற்றினாலும் தோற்பது உறுதி. தேர்தல் நேரத்தில் அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை பொதுமக்கள் உணர்ந்துள்ளனர். முதலில், அவர் உத்தரபிரதேச மக்களால் நிராகரிக்கப்பட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.