வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: மஹாராஷ்டிரா மாநிலத்தில் 500 புதிய ரயில்வே திட்டங்களை வரும் 12-ம் தேதி பிரதமர் துவக்கி வைக்கிறார்
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறி இருப்பதாவது: மஹாராஷ்டிரா மாநிலம் பயன்பெறும் வகையில் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் 500க்கும் மேற்பட்ட ரயில்வே திட்டங்களை வரும் 12-ம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். இதில் மும்பை சென்ட்ரலில் இருந்து அகமதாபாத் நகருக்கு துவக்கி வைக்கப்படும் வந்தேபாரத் ரயில் திட்டமும் ஒன்று . இது மாநிலத்தின் எட்டாவது வந்தே பாரத் ரயிலாகும்.
மேலும் மாநிலத்தில் உள்ள லத்தூரில் அமைக்கப்பட்டு உள்ள கோச் தொழிற்சாலை, பத்னேராவில் வேகன் பழுதுபார்க்கும் பணிமனை மற்றும் புனேவில் வந்தே பாரத் பராமரிப்பு மற்றும் பணிமனை அதனுடன் எல்டிடி ,மன்மட், பிம்ப்ரி, சோலாப்பூர், நாக்பீர் உள்ளிட்ட இடங்களில் ஜன் ஓளஷதி கேந்திரா ( மக்கள் மருந்தகம்) திறப்பு, நாசிக்ரோடு, அகோலா மும்பை மேற்கு புறநகர் பகுதியில் அமைந்துள்ள அந்தேரி, போரிவிலி பகுதிகளில் ரயில் உணவகங்கள் திறக்கப்படுகின்றன.
தொடர்ந்து சரக்கு முனையங்கள் மற்றும் மூன்று மின்மயமாக்கல் திட்டங்கள் உள்ளிட்டவை திறந்து வைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement