96வது ஆஸ்கர் விருதுகள் : 'ஓபன்ஹெய்மர்' படத்திற்கு 7 விருதுகள்

உலக அளவில் புகழ் பெற்ற திரைப்பட விருதுகளில் முதன்மையானதாகக் கருதப்படுவது ஆஸ்கர் விருதுகள். அமெரிக்காவில் உருவாகும் ஆங்கிலப் படங்களுக்கென ஆரம்பிக்கப்பட்ட விருதுகள் உலக அளவிலும் புகழ் வாய்ந்தவை. உலகின் மற்ற மொழிப் படங்களுக்கெனவும் சில குறிப்பிட்ட விருதுகள் அதில் வழங்கப்படுகிறது.

96வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் 'ஓபன்ஹெய்மர்' படத்திற்கு ஏழு விருதுகள் கிடைத்துள்ளது. சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு என ஏழு பிரிவுகளில் வென்றுள்ளது.

பிரபல ஹாலிவுட் இயக்குனரான கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளிவந்த 'படம் 'ஓபன்ஹெய்மர்'. சில்லியன் மர்பி, எமிலி பன்ட், மேட் டாமோன், ராபர்ட் டௌனி ஜுனியர் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இதற்கு முன்பு ஆஸ்கர் விருதுகளில் கிறிஸ்டோபர் நோலன் 8 முறை 'நாமினேட்' செய்யப்பட்டுள்ளார். ஆனால், இப்போதுதான் முதல் முறையாக சிறந்த இயக்குனருக்கான விருதையும், சிறந்த படத்திற்கான விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கர் விருது வென்றவர்கள் பட்டியல்…

சிறந்த படம் : ஓபன்ஹெய்மர்

சிறந்த நடிகர் : சில்லியன் மர்பி (ஓபன்ஹெய்மர்)

சிறந்த நடிகை : எம்மா ஸ்டோன் (புவர் திங்ஸ்)

சிறந்த இயக்குநர் : கிறிஸ்டோபர் நோலன் (ஓபன்ஹெய்மர்)

சிறந்த துணை நடிகர் : ராபர்ட் டவுனி ஜூனியர் (ஓபன்ஹெய்மர்)

சிறந்த துணை நடிகை : டாவின் ஜாய் ராண்டால்ப் (தி ஹோல்டோவர்ஸ்)

சிறந்த இசை (ஒரிஜினல்) : இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆப் டெஸ்டினி

சிறந்த பாடல் (ஒரிஜினல்) : வாட் வாஸ் ஐ மேட் பார்? (பார்பி)

சிறந்த அனிமேஷன் திரைப்படம் : தி பாய் அண்ட் தி ஹெரான்

சிறந்த திரைக்கதை : அமெரிக்கன் பிக்ஷன்

சிறந்த அசல் திரைக்கதை : அனாடமி ஆப் எ பால்

சிறந்த ஒளிப்பதிவு : ஓபன்ஹெய்மர்

சிறந்த எடிட்டிங் : ஓபன்ஹெய்மர்

சிறந்த ஆடை வடிவமைப்பு : நெப்போலியன்

சிறந்த ஆவணப்படம் : 20 டேஸ் இன் மரியுபோல்

சிறந்த ஆவணக் குறும்படம் : தி லாஸ்ட் ரிப்பேர் ஷாப்

சிறந்த சர்வதேச திரைப்படம் : தி ஸோன் ஆப் இன்ட்ரஸ்ட்

சிறந்த ஆடை வடிவமைப்பு மற்றும் சிகை அலங்காரம் : புவர் திங்ஸ்

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு : புவர் திங்ஸ்

சிறந்த அனிமேஷன் குறும்படம்: வார் இஸ் ஓவர்

சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம்: தி ஒண்டர்புல் ஸ்டோரி ஆப் ஹென்றி சுகர்

சிறந்த ஒலி: தி ஸோன் ஆப் இன்ட்ரஸ்ட்

சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ்: காட்ஜில்லா மைனஸ் ஒன்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.