பூஜை போட்ட பாண்டியா… தேங்காய் உடைத்த பவுச்சர் – குஷி மோடில் மும்பை இந்தியன்ஸ்!

Mumbai Indians 2024, Hardik Pandya: ஐபிஎல் தொடர் இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ளது. 2022ஆம் ஆண்டில் இருந்து 10 அணிகள் ஐபிஎல் தொடரில் (IPL 2024) போட்டியிடுகிறது. சிஎஸ்கே, மும்பை உள்ளிட்ட அணிகள் தங்களின் ஐந்து கோப்பைக்காக இந்த தொடரை எதிர்நோக்கி காத்திருக்கின்றன. வழக்கம் போல இந்தாண்டும் 10 அணிகளிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, ஐந்து அணிகளின் கேப்டன்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

அதிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 முறை கோப்பை வென்று கொடுத்த ரோஹித் சர்மா அதிரடியாக நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்பை பெற்றுள்ளார். ஹர்திக் பாண்டியா 2022ஆம் ஆண்டு மெகா ஏலத்தை முன்னிட்டு மும்பை இந்தியன்ஸ் அணியால் கழட்டிவிடப்பட்ட நிலையில், அவரை புதிதாக வந்த குஜராத் டைட்டன்ஸ் அணி தட்டி தூக்கியது. ஹர்திக் பாண்டியாவின் தலைமையில் 2022இல் குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தையும், 2023இல் இரண்டாமிடத்தையும் பெற்றது. 

மும்பை அணியில் குழப்பமா?

தொடர்ந்து, ஹர்திக் பாண்டியாவின் வளர்ச்சியை கண்டதாலோ என்னமோ, மீண்டும் அவரை டிரேடிங்கில் வாங்கி உடனே அவர் கேட்டதாக கூறப்படும் கேப்டன்ஸியையும் கையில் கொடுத்துவிட்டது. ஹர்திக் பாண்டியா அணிக்குள் கொண்டுவந்ததில் இருந்து அவரை கேப்டனாக அறிவித்தது வரை பல மர்ம காட்சிகள் அணிக்குள் நடந்தது எனலாம். ரோஹித்தின் நீடிக்கும் மௌனம், சூர்யகுமார் – பும்ரா ஆகியோரின் அதிருப்தி (??) போஸ்ட், தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சரின் நேர்காணலுக்கு முந்திக்கொண்டு எதிர்கருத்து தெரிவிக்கும் ரோஹித் சர்மாவின் மனைவி(!) என அடுக்கடுக்காக கூறலாம். 

ரோஹித் சர்மா விளையாட மாட்டார்?

இது மட்டுமின்றி, ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா இல்லையா என்பதே இன்னும் உறுதியாகவில்லை எனலாம். சமீபத்தில் நடந்த முடிந்த இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தை முதுகு பிடிப்பு காரணமாக ரோஹித் சர்மா முழுவதுமாக தவறவிட்டார். இருப்பினும் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்தும் அசத்தியிருந்தார். அன்றைய தினம் கேப்டன்ஸியை பும்ரா கவனித்துக்கொண்ட நிலையில், கோப்பையை ரோஹித் சர்மா வாங்கினார். 
 
இதன்மூலம், ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியாவின் கீழ் விளையாடுவாரா இல்லையா என வெறும் வாயில் பலரும் அவல் அரைக்க தொடங்கிவிட்டனர். Impact Player ஆகவே ரோஹித் இந்த சீசனில் களமிறக்கப்படுவார் என கூறப்படும் நிலையில், ரோஹித் அதற்கு உடன்படுவாரா என்பதும் தெரியவில்லை. 

चला सुरु करूया#OneFamily #MumbaiIndians @hardikpandya7 pic.twitter.com/XBs5eJFdfS

— Mumbai Indians (@mipaltan) March 11, 2024

பயிற்சியை தொடங்கிய ஹர்திக் பாண்டியா

இவை ஒருபுறம் இருக்க மும்பை இந்தியன்ஸின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா இன்று அணியின் பயிற்சி முகாமில் இணைந்தார். அவரை தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் மற்றும் பயிற்சியாளர்கள் குழு வரவேற்றது. தொடர்ந்து, கடவுள் புகைப்படத்திற்கு மாலை அணிவித்தார், ஹர்திக் பாண்டியா. தொடர்ந்து, மார்க் பவுச்சர் தேங்காய் உடைக்க கடவுளுக்கு பூஜை போட்டு பயிற்சியை தொடங்கினர் எனலாம். ஹர்திக் பாண்டியா மட்டுமில்லாமல் சூர்யகுமார் யாதவ், ஜெரால்ட் கோட்ஸி உள்ளிட்ட பல வீரர்கள் இன்று பயிற்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.