இலங்கை உடலியல் மருத்துவ நிறுவகத்தின் விசேட வேலைத்திட்டமாக இன்று அதாவது மார்ச் 13 ஆம் திகதி உடல் சார்ந்த நோய் தினத்தை முன்னிட்டு, சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன தலைமையில், மக்களுனக்கான பொது இணையப் பக்கம் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (13) அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்த இணையத்தளத்தின் ஊடாக சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் மக்கள் தங்களின் சகல உடல்நலப் பிரச்சினைகளுக்கும் பதில்களைக் கண்டறிய முடியும். அதாவது, அனைத்து சுகாதார தகவல்களும், நோய்கள் பற்றிய தகவல்களும், அவற்றை எவ்வாறு தடுப்பது மற்றும் ஆரோக்கியமாக வாழ்வது எப்படி என்பன பற்றியும் அறிந்து கொள்ள முடியும்.
இலங்கை முழுவதிலுமிருந்து 600 உடலியல் விசேட வைத்திய நிபுணர்களைக்; கொண்ட இலாப நோக்கற்ற சங்கமாகக் கருதப்படும் உடலியல் மருத்துவக் கல்லூரியினால் மக்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த இணையத்தளம் அறிமுகப்படுத்தப்படுகிறது, மேலும் எளிய மொழியில் மக்கள் புரிந்துகொள்ளக்கூடியவாறு சரியான மற்றும் அறிவியல் மருத்துவ உண்மைகளை கொண்டு வருவதே இதன் நோக்கமாகும்.
இந்நிகழ்வில் உரையாற்றிய சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன, இந்த இணையப் பக்கம் இந்நாட்டு மக்களைத் தெளிவூட்டும் பணியை சிறப்பாகச் செய்து வருவதாகவும், அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் அனைத்து வைத்தியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
இந்த விசேட நிகழ்வில் சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபால மற்றும் பல வைத்திய நிபுணர்கள் கலந்துகொண்டனர்.