கலபுரகி, “பச்சைக்கொடி காட்டி, ரயில் சேவையை துவக்கி வைப்பது மட்டும் தான், பிரதமர் நரேந்திர மோடியின் சாதனை,” என, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே விமர்சித்துள்ளார்.
கலபுரகி டவுனில் நடந்த வாக்குறுதித் திட்ட மாநாட்டில் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:
பிரதமர் மோடி, உங்களிடம் வந்து, நாட்டை 75 ஆண்டுகளாக காங்கிரஸ் நாசப்படுத்தியது என்று சொல்வார். நீங்கள் அவரிடம் திருப்பிக் கேளுங்கள். நீங்கள் 10 ஆண்டுகள் என்ன செய்தீர்கள் என்று. பல்லாரி, ராய்ச்சூர், பீதர், யாத்கிர், கலபுரகி உள்ளிட்ட கர்நாடகாவின் வடமாவட்டங்களுக்கு பிரதமர் மோடியின் பங்களிப்பு என்ன?
நாட்டின் 40 கோடி பேரை, இன்னும் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. கடுமையான ஜாதி அமைப்பால் நாடு வழிநடத்தப்படுகிறது. ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவதாகவும், ஆண்டுக்கு 2 கோடி வேலை தருவதாகவும், பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். அவரது வாக்குறுதி என்ன ஆனது?
பச்சைக்கொடி காட்டி, ரயில் சேவை துவக்கி வைப்பது மட்டும் தான், பிரதமர் மோடியின் சாதனை.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement