வெள்ளி முதல் வியாழன் வரை (15.3.2024 – 21.3.2024) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.
மேஷம்
கேது, சுக்கிரன், சனி, செவ்வாய் நன்மைகளை வழங்குவர். முருகர் வழிபாடு முன்னேற்றத்தை உண்டாக்கும்.
அசுவினி: லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் உங்கள் ராசிநாதனால் வருமானத்தில் இருந்த தடை விலகும். விருப்பம் நிறைவேறும். வேலைக்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
பரணி: ஆறாமிடத்தில் கேதுவும் லாப ஸ்தானத்தில் சனியும் சஞ்சரிப்பதால் இந்த வாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். வழக்கு சாதகமாகும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
கார்த்திகை 1ம் பாதம்: உங்கள் நட்சத்திராதிபதி ராகுவுடன் இணைந்து விரய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் ராசியாதிபதி லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களில் ஆதாயம் உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வெளிநாட்டிற்கு செல்வதற்கு மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும்.
ரிஷபம்
புதன், ராகு, சூரியன் நன்மைகளை வழங்குவர். மீனாட்சி அம்மனை மனதில் வழிபட வாழ்க்கை வளமாகும்.
கார்த்திகை 2,3,4: உங்கள் நட்சத்திரநாதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அரசுவழி முயற்சி நிறைவேறும். வியாபாரம் தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய இடம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். வருமானத்தில் இருந்த தடை விலகும்.
ரோகிணி: உங்கள் நட்சத்திரநாதனும் பதினொன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் ராகு, சூரியன், புதனும் ஆற்றலை அதிகரிப்பர். எதிர்பார்த்த வருமானம் வரும். சங்கடம் விலகும். எதிர்ப்பு இல்லாமல் போகும். செல்வாக்கு உயரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
மிருகசீரிடம் 1,2: கடந்த வாரத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். புதிய முயற்சி வெற்றியாகும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கிரகம் செயல்களில் முன்னேற்றத்தை உண்டாக்குவர். பணம் பல வழியிலும் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.
மிதுனம்
சுக்கிரன், சனி, சூரியன், புதன், குரு நன்மைகளை வழங்குவர். ஸ்ரீரங்கநாதரை வழிபட வளமுண்டாகும்.
மிருகசீரிடம் 3,4: பாக்கிய சுக்கிரனால் வரவு அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். முயற்சிகள் எளிதாக நிறைவேறும். எதிர்பார்த்த வருமானம் வரும் வியாபாரத்தில் இருந்த தடை விலகும். லாப குருவால் திருமண வயதினருக்கு வரன் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.
திருவாதிரை: வாரத்தின் முதல் நாட்களில் தடைகளும் தாமதமும் உண்டாகும். பத்தாமிட சூரியனால் உத்தியோகத்தில் இருந்த பிரச்னை விலகும். செல்வாக்கு உயரும். எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரம் ஆதாயத்தை நோக்கிச் செல்லும்.
புனர்பூசம் 1,2,3: பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி சுக்கிரனால் முயற்சி ஆதாயமாகும். தொழில் தொடங்க எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சங்கடம் விலகும். ஒரு சிலர் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவீர். வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களின் கனவு பூர்த்தியாகும்.
கடகம்
கேது நன்மைகளை வழங்குவார். நவக்கிரகங்களுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்ற சங்கடம் போகும்.
புனர்பூசம் 4: வாரத்தின் முதல் இரண்டு நாட்களும் இழுபறியாக இருந்த முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள். ஞாயிறு திங்களில் செலவு அதிகரிக்கும். உங்களிடம் ஒரு அசாத்திய துணிச்சல் உண்டாகும். விருப்பம் எளிதாக பூர்த்தியாகும். வேலைக்காக முயற்சித்து வந்தவர்களின் கனவு நிறைவேறும்.
பூசம்: மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் கேது உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவார். செயல்களில் எதிர்பார்த்த லாபத்தை உண்டாக்குவர். சனி, செவ்வாய் மறைவு பெறுவதால் முயற்சியில் கவனம் தேவை. ஒருசிலர் தங்கள் இடத்தை விற்க வேண்டிய சூழல் உண்டாகும்.
ஆயில்யம்: உங்கள் லாபாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பார்ப்பு நிறைவேறும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். அரசுத்துறைகளில் பணியாற்றுபவர்களின் மதிப்பு அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும்.
சிம்மம்
புதன், குரு நன்மைகளை வழங்குவர். தட்சிணாமூர்த்தியை வழிபட சங்கடம் விலகும்.
மகம்: உங்கள் ராசிநாதன் எட்டாமிடத்தில் மறைவு பெற்றிருப்பதால் வியாபாரிகள் கணக்கு வழக்குகளில் கவனம் வேண்டும். அரசு வழியில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். குடும்ப உறவுகளை அனுசரித்துச் செல்வதால் விருப்பம் நிறைவேறும்.
பூரம்: ஒன்பதாமிடத்தில் சஞ்சரிக்கும் குரு உங்கள் நிலையில் முன்னேற்றத்தை உண்டாக்குவர். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். முயற்சிகளில் லாபம் உண்டாகும். சோதனைகளை வென்று சாதனை புரிவீர்.
உத்திரம் 1: உங்கள் நட்சத்திர, ராசிநாதன் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செயல்களில் சங்கடம் உண்டாகும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். எதிர்ப்பு வலுக்கும். சந்திரனின் சஞ்சார நிலைகளால் வரவு அதிகரிக்கும். விருப்பம் நிறைவேறும்.
கன்னி
சனி, செவ்வாய் நன்மைகளை வழங்குவர். உலகளந்த பெருமாளை வழிபட சங்கடம் விலகும்.
உத்திரம் 2,3,4: ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் கேதுவால் குழப்பம் அதிகரிக்கும். செயல்கள் குளறுபடியாகும் என்றாலும், சனி, செவ்வாயின் சஞ்சார நிலையால் முயற்சியில் ஆதாயம் தோன்றும். எதிர்பார்த்த வருமானம் வரும். சங்கடம் நீங்கும்.
அஸ்தம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் உங்கள் செயல்களில் வாரத்தின் முதல் இரண்டு நாட்களும் டென்ஷன் அதிகரிக்கும். நினைப்பதும் நடப்பதும் வேறாக இருக்கும். அதன்பின் செயல் சீராகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். முயற்சிக்கேற்ற வருவாய் உண்டாகும்.
சித்திரை 1,2: வாரத்தின் தொடக்கத்தில் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சந்திரனால் உங்கள் செயல்களில் இழுபறி உண்டாகும். அதன்பின் ஆறாமிட செவ்வாய் சனியால் ஆற்றல் அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். நெருக்கடி குறையும் வாரமிது.
சந்திராஷ்டமம்:
13.3.2024 அதிகாலை 12:14 மணி – 15.3.2024 அதிகாலை 3:52 மணி
துலாம்
சுக்கிரன், சூரியன், புதன், ராகு, குரு நன்மைகளை வழங்குவர். காஞ்சி காமாட்சி அம்மனை மனதில் எண்ணி வழிபட வாழ்க்கை வளமாகும்.
சித்திரை 3,4: கடந்த வார நெருக்கடி விலகும். ஆறாமிட சூரியன் விருப்பம் நிறைவேறும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை விலகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். குரு பார்வையால் திருமண வயதினருக்கு வரன் வரும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். சனி ஞாயிறில் சில சங்கடம் தோன்றும்.
சுவாதி: கடந்த வார நிலையில் மாற்றம் ஏற்படும். ஆறாமிட ராகு, சூரியனால் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். வியாபாரம் தொழிலில் இருந்த தடை விலகும். வருமானம் அதிகரிக்கும். ஞாயிறு திங்களில் விழிப்புணர்வு அவசியம்.
விசாகம் 1,2,3: சப்தம குருவால் முயற்சி வெற்றியாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த தடை விலகும். இந்த வாரத்தில் நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். அந்தஸ்து செல்வாக்கு உயரும். உடலில் இருந்த சங்கடம் விலகும். திங்கள் செவ்வாயில் சில நெருக்கடி உண்டாகும்.
சந்திராஷ்டமம்:
15.3.2024 அதிகாலை 3:53 மணி – 17.3.2024 காலை 9:22 மணி
விருச்சிகம்
சுக்கிரன், கேது நன்மைகளை வழங்குவர். மருதமலை முருகனை வணங்கி வர வளமுண்டாகும்.
விசாகம் 4: குரு பகவானின் பார்வைகளும் சந்திரனின் சஞ்சார நிலைகளும் உங்கள் முயற்சிகளை லாபமாக்கும். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை அடைவீர். எதிரி விலகிச் செல்வர். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். செவ்வாய் அன்று உங்கள் செயல்களில் கவனம் தேவை.
அனுஷம்: லாப ஸ்தானத்தில் கேது பலம் பெற்றிருப்பதால் எண்ணம் நிறைவேறும். முயற்சி வெற்றியாகும். எதிர் பார்த்த தகவல் வரும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். செவ்வாய் புதனில் செயல்களில் விழிப்புணர்வு அவசியம்.
கேட்டை: கடந்த வாரத்தில் இருந்த சங்கடம் விலகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். உங்கள் தேவைகளை எளிதாக அடைவீர். நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். தடைபட்டிருந்த செயல் நடந்தேறும். புதன்கிழமை சில தடை உண்டாகும்.
சந்திராஷ்டமம்:
17.3.2024 காலை 9:23 மணி – 19.3.2024 மாலை 5:15 மணி
தனுசு
சுக்கிரன், சனி, செவ்வாய், புதன், குரு நன்மைகளை வழங்குவர். ஆலங்குடி குரு பகவானை வழிபட வாழ்க்கை வளமாகும்.
மூலம்: மூன்றாமாதிபதி பலம் பெற்றுள்ளதால் உங்கள் முயற்சிகளில் ஆதாயம் உண்டாகும். செய்து வரும் தொழிலில் இருந்த தடை விலகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். செல்வாக்கு உயரும். வருமானம் அதிகரிக்கும். வியாழக்கிழமை உங்கள் செயல்களில் கவனம் அவசியம்.
பூராடம்: ஐந்தாமிட குருவும், மூன்றாமிட சுக்கிரன், சனி, செவ்வாயும் உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவர். அரசு உத்தியோகஸ்தர், அரசியல்வாதிகளின் நிலை உயரும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் வரும். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும்.
உத்திராடம் 1: சுறு சுறுப்பாக செயல்பட்டு உங்கள் வேலைகளை முடிப்பீர். வேலை தேடியவருக்கு எதிர்பார்த்த தகவல் வரும். தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும். வருமானம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும்.
சந்திராஷ்டமம்:
19.3.2024 மாலை 5:16 மணி – 22.3.2024 அதிகாலை 3:25 மணி
மகரம்
சுக்கிரன், ராகு, சூரியன் நன்மைகளை வழங்குவர். தில்லை நடராஜரை வணங்கி வர சங்கடம் தீரும்.
உத்திராடம் 2,3,4: மூன்றாமிட ராகு, சூரியனால் உங்கள் முயற்சி பலிக்கும். செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர். சட்ட சிக்கல் முடிவிற்கு வரும். பொருளாதார நிலை உயரும்.
திருவோணம்: உங்கள் முயற்சி இந்த வாரம் எளிதாக வெற்றியாகும். உடல்நிலையில் இருந்த சங்கடம் விலகும். எதிர்பார்த்த பணம் வரும். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
அவிட்டம் 1,2: குரு பகவானின் பார்வைகளும் சந்திரனின் சஞ்சார நிலைகளும் தொழில், வியாபாரத்தில் லாபத்தை உண்டாக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். மூன்றாமிட ராகு சூரியனால் முயற்சி முன்னேற்றம் அடையும். புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவீர். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.
கும்பம்
சுக்கிரன், புதன் நன்மைகளை வழங்குவர். காளிகாம்பாளை வழிபட செயல்களில் வெற்றியாகும்.
அவிட்டம் 3,4: ராசிக்குள் சனி செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற பிரச்னை தேடிவரும். டென்ஷன் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளில் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. சந்திரனின் சஞ்சாரங்களால் எதிர்பார்த்த வரவு வரும். பொருளாதார நிலை உயரும்.
சதயம்: உங்கள் தொழில் ஸ்தானாதிபதி செவ்வாய், ராசிநாதன் சனி ராசிக்குள் சஞ்சரிப்பதால் வியாபாரம் தொழிலில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் சூரியன் ராகுவால் நிதிநிலை உயரும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
பூரட்டாதி 1,2,3: ஜென்ம சுக்கிரனால் வரவு அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். உங்கள் சங்கடம் தீரும். எதிர்பார்த்த வருமானம் வரும். எதிர்ப்பு விலகும். திட்டமிட்டு செயல்பட்டு ஆதாய வேலைகளை முடித்துக் கொள்வீர். உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம்.
மீனம்
புதன், குரு, சுக்கிரன் நன்மையை வழங்குவர். குலதெய்வத்தை வழிபட சங்கடம் குறையும்.
பூரட்டாதி 4: இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் உங்கள் ராசி நாதனால் பண வரவில் இருந்த தடை விலகும். குடும்பத்தில் இருந்த குழப்பம் தீரும். நெருக்கடி நீங்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். பனிரெண்டாமிட சுக்கிரனால் வரவு அதிகரிக்கும்.
உத்திரட்டாதி: நிழல் கிரகங்களின் சஞ்சார நிலைகளால் உங்கள் மனம், செயல்களில் தடுமாற்றம் ஏற்பட்டாலும், குடும்ப ஸ்தான குருவும் பனிரெண்டாமிட சுக்கிரனும் வரவை அதிகரிப்பர். இரண்டு நாள் சங்கடத்தில் இருந்து விடுபடுவீர். உங்கள் செல்வாக்கை உயர்த்துவர்.
ரேவதி: மனக்காரகன் சந்திரனும் ராசிநாதன் குருவும் வாரம் முழுவதும் உங்களைப் பாதுகாப்பர். செயல்களை முன்னிருந்துவீர்கள். வருமானம் அதிகரிக்கும். பண வரவில் இருந்த தடை விலகும். அரசுவழி முயற்சியில் ஆதாயமாகும். மனதில் தைரியமும் துணிச்சலும் அதிகரிக்கும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்