புது டில்லி: ஐ.நா., ஆதரவுடன் வெளியாகும் உலகின் மிகவும் மகிழ்ச்சிகரமான நாடுகள் அட்டவணையில் பின்லாந்து தொடர்ந்து 7-வது முறையாக முதலிடம் பிடித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20-ம் தேதி சர்வதேச மகிழ்ச்சி நாளையொட்டி ஒவ்வொரு ஆண்டும் உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இதன்படி 2024ம் ஆண்டுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் வடக்கு ஐரோப்பிய நாடான பின்லாந்து தொடர்ந்து 7 வது ஆண்டாக முதலிடத்தில் நீடிக்கிறது. டென்மார்க் 2ம் இடம், ஐஸ்லாந்து 3ம் இடம், இஸ்ரேல் 4ம் இடம் நெதர்லாந்து 5ம் இடமும், நார்வே 6-ம் இடம், லக்ஸம்பர்க் 7 சுவிட்சர்லாந்து 8-ம் இடம்,, ஆஸ்திரேலியா 9-ம் இடம் பெற்றுள்ளன.
இப்பட்டியலில் 126 வது இடத்தில் இந்தியா உள்ளது. சமூக ஆதரவு, நேர்மையான அரசாங்கம் ஆகியவை நல்வாழ்வுக்கு முக்கியம் என்பதே பல ஆண்டுகளாக உலக மகிழ்ச்சி அறிக்கை வலியுறுத்தும் பாடம் என அறிக்கையை தயாரித்தவர்கள் கூறியுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement