சிவகார்த்திகேயனுக்கு நடனம் சொல்லித் தந்த ஸ்ரீ லீலா

தெலுங்கு திரையுலகில் மிகக்குறுகிய காலத்தில் கவனம் பெற்று முன்னணி நடிகை அளவிற்கு உயர்ந்துள்ளவர் நடிகை ஸ்ரீ லீலா. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் இவர் ஜோடியாக நடித்த குண்டூர் காரம் திரைப்படமும் அதிலும் குறிப்பாக தமன் இசையில் மகேஷ்பாபுவுடன் இவர் இணைந்து அதிரடி ஆட்டம் போட்ட 'குர்ச்சி மடத்தப்பெட்டி' என்கிற பாடல் இப்போதும் இணையதளத்தில் வைரலான ஒன்று. சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிவகார்த்திகேயன், ஸ்ரீ லீலா இருவரும் கலந்து கொண்டனர்

இவர்கள் இருவரும் ஒன்றாக மேடை ஏறியபோது கீழே அமர்ந்திருந்த ரசிகர்கள் சிவகார்த்திகேயனையும் ஸ்ரீ லீலாவையும் 'குர்ச்சி மடத்தப்பெட்டி' பாடலுக்கு ஒன்றாக இணைந்து ஆடும்படி கோரிக்கை வைத்தனர். அதை ஏற்றுக்கொண்ட ஸ்ரீ லீலா, சிவகார்த்திகேயனுக்கு அந்த நடனத்தில் சில ஸ்டெப்புகள் குறித்து அங்கேயே கற்றுக் கொடுக்க இருவரும் சில வினாடிகள் அந்த பாடலுக்காக இணைந்து நடனம் ஆடினர், இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.