வேலூர் நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் குடியாத்தம் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘நான் யார் தெரியுமா, துரைமுருகனின் மகன். கடந்த முறை வெற்றி பெற்றபோது, இந்த குடியாத்தத்துக்கு ‘புறவழிச்சாலைப் போட்டுக்கொடுக்கிறேன்’ என்று ஒரு பெரிய வாக்குறுதியைக் கொடுத்திருந்தேன். டெல்லிக்குப் போனேன். ஃபார்லிமென்டில் உட்கார்ந்தேன். அங்குள்ள அமைச்சரிடம் புறவழிச்சாலைப் போட்டுத்தருமாறு கேட்டேன். எதுவும் நடக்கவில்லை. ஒருநாள் ஃபார்லிமென்டில் நேருக்குநேர் அமைச்சர் இருக்கும்போது, ‘அய்யா, குடியாத்தத்துக்கு ரிங் ரோடு கொடுப்பீங்களா, இல்லையா?’ என்று கேட்டேன்.

அதற்கு அவர், ‘இப்போது முடியாது. பணம் இல்லை’ என்று சொன்னார். அப்போது, ‘நான் தற்கொலை பண்ணிக்கொள்வேன்’ என்றேன். ‘கொடுத்த வாக்குறுதியை எவனொருவன் நிறைவேற்றுகிறானோ… அவன்தான் தி.மு.க-காரனாக இருக்க முடியும்’ என்று என் அப்பா கற்றுக்கொடுத்திருக்கிறார். ஆகையால், என் உயிர் போனாலும் பரவாயில்லை. கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும்’ என்று அவரிடம் சொல்லிவிட்டு வந்தேன்.
ஜனவரி 19… அடுத்து வந்த என்னுடைய பிறந்த நாளுக்கு அமைச்சர் நிதின் கட்கரி எனக்குப் போன் போட்டு, ‘நீ கேட்டதற்காக, உன்னுடைய பிறந்த நாள் பரிசாக ரிங் ரோடுக்கு ரூ.221 கோடி ஒதுக்கிக் கொடுத்திருக்கிறேன்’ என்று சொன்னார். இன்றைக்கு குடியாத்தத்தை வளைத்து, நைசாக போய்க்கொண்டிருக்கிறது அந்த பைபாஸ் ரோடு. நீங்கள் மீண்டுமொரு முறை எனக்கு வாக்களித்து ஜெயிக்க வைத்தால், அதுபோல பல நிகழ்ச்சிகளை வேலூர் பாராளுமன்றத்தில் நிகழ்த்திக் காட்டுகிறேன்’’ என்றார்.
அதேபோல, கே.வி.குப்பம் பகுதியில் கூடியிருந்த பெண்கள் மத்தியில் கதிர் ஆனந்த் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, ‘‘எல்லோரும் ‘பளபள’னு மின்னுறீங்களே. என்ன சமாச்சாரம். ‘ஃபேர் அண்ட் லவ்லி’ போட்டு வந்துட்டீங்களா. யாரோ மாசமாசம் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறாங்களே. கரெக்ட்டா வருதா, உண்மையா?. தலைவர் கொடுக்கிற மாசம் ஆயிரம் ரூபாயை எத்தனைபேர் வாங்கிறிங்க. கையை தூக்குங்க பாக்கலாம். இவ்ளோ பேரா வாங்கிறிங்க. நான் புதியவன் அல்ல. உங்களுக்கு நல்லா தெரிஞ்சவன். காட்பாடி துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் ஆகிய நான்தான் உங்களிடம் மீண்டும் வாக்கு கேட்டு வந்துருக்கிறேன். மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை கொஞ்சம் பேருக்கு வரலைனு சொல்லிருக்கீங்க. அவர்களெல்லாம் ஃபார்ம் கொடுத்திருக்கிங்களா, இல்லையா?. தேர்தலுக்குப் பிறகு அவர்களுக்கும் கொடுக்கிறோம். கண்டிப்பாக விடுபட்டவர்களெல்லாம் உரிமைத் தொகை கிடைக்கும் என்று உரிமையாகச் சொல்கிறேன்’’ என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY