சென்னை: 300 நாட்களை கடந்து சிறையில் இருக்கும் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம், மே 6ம் தேதிக்கு தள்ளிவைத்தது. பண மோசடி தொடர்பான திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 320 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளார். அவருக்கு மாவட்ட நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றங்கள் ஜாமின் வழங்க மறுத்து வருகிறது. இதையடுத்து, செந்தில் பாலாஜி தரப்பில், ஜாமின் கோரி உச்சநீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. […]