சென்னை: நடிகர் விஜய் கோட் மற்றும் தளபதி 69 படங்களைத் தொடர்ந்து முழுநேர அரசியல்வாதியாக பயணிக்க முடிவெடுத்துள்ளார். 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நடிகர் விஜய் போட்டியிட உள்ளார். நடிகர் விஜய்யின் தளபதி 69-வது படத்தை எச். வினோத் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
