மதுரை: இயக்குநர் அமீரின் மகள் அனி நிஷாவின் திருமணம் இன்று காலை மதுரை கருப்பாயூரணியில் உள்ள திருமண மண்டபத்தில் எளிமையான முறையில் நடைபெற்றது. திருமணத்துக்கு திரையுலகினர் பலர் வந்து கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இஸ்லாமிய முறைப்படி நடைபெற்ற திருமணத்தில் இயக்குநர் அமீர் வருகை தந்த பிரபலங்களோட ஆரத் தழுவி அளவளாவி பேசிய வீடியோ காட்சிகள் வெளியாகி
