அம்பானி இல்லத் திருமண விழா: புதுமணத் தம்பதியரை நேரில் வாழ்த்திய பிரதமர் மோடி

மும்பை: மும்பை மாநகரில் மிக பிரமாண்டமாக நடைபெற்ற அம்பானி இல்லத் திருமண விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு புதுமணத் தம்பதியரை வாழ்த்தினார்.

சனிக்கிழமை அன்று மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் (Jio World Convention Centre) ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்சண்ட் தம்பதியரின் திருமண வரவேற்பு நிகழ்வான ‘ஷுப் ஆசிர்வாத்’ நிகழ்வில் அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள் பங்கேற்றனர். இதில் பிரதமர் மோடியும் பங்கேற்றார்.

அப்போது அவரது கால்களை தொட்டு ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்சண்ட் வணங்கினர். பிரதமர் மோடி தனது வாழ்த்தினை தெரிவித்தார். அப்போது உடன் இருந்த ஆனந்த் அம்பானியின் பெற்றோர் முகேஷ் அம்பானி மற்றும் நீட்டா அம்பானி, ராதிகா மெர்சண்டின் பெற்றோரிடமும் வாழ்த்து தெரிவித்தார்.



இந்த நிகழ்வில் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள், அரசியல் ஆளுமைகள், சினிமா நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், ஆன்மிக குருமார்களும் பங்கேற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.