நடிகர் சிம்பு அடுத்த படத்திற்கான அப்டேட்டை கொடுத்திருக்கிறார்.
மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்து உருவாகி வரும் ‘Thug Life’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சிம்பு . மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. அசோக் செல்வன் , த்ரிஷா, அபிராமி , ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ‘Thug Life’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவுக்கு வந்துள்ள நிலையில் 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் 48வது படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தினை தேசிங்கு பெரியசாமி இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், இன்னும் படப்பிடிப்பு எதுவும் துவங்கவில்லை. தற்போது தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் சிம்பு.
Dum + Manmadhan + Vallavan + Vtv
in Gen Z mode = NAMBA NEXT !!! ❤️— Silambarasan TR (@SilambarasanTR_) October 19, 2024
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருந்த அவர், “தம் + மன்மதன் + வல்லவன் + விண்ணைத்தாண்டி வருவாயா இணைந்த ஜென் இசட் (gen z 1995 2010க்குள் பிறந்தவர்கள்) கதைதான் நம்ம அடுத்த திரைப்படம்” எனத் தெரிவித்திருக்கிறார். இயக்குநர், தயாரிப்பாளர் குறித்த அறிவிப்பு அதையும் அவர் தெரிவிக்கவில்லை.