வாக்காளர் அடையாள அட்டைகளில் மோசடி தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பிய நிலையில் இந்த குளறுபடிக்கு மூன்று மாதத்தில் தீர்வு காண இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியாவில் மொத்தம் சுமார் 99 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர், ஒவ்வொரு வாக்காளருக்கும் தனித்துவமான வாக்காளர் அடையாள (EPIC) எண் ஒதுக்கப்படுகிறது. இந்த நிலையில், ஒரே EPIC எண்ணைக் கொண்ட வாக்காளர் அடையாள அட்டைகளின் பட்டியலை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்டனர். முதலில் இதனை ஏற்க மறுத்து […]
