MS Dhoni : பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியை சந்தித்து. இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் வாய்ப்பை முதல் அணியாக இழந்தது. இது குறித்து பேசிய தோனி, பேட்டிங்கை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே அணி இருப்பதாகவும், இப்போதைக்கு அணியின் சொத்தாக டெவால்ட் ப்ரீவிஸ் மட்டுமே இருப்பதாகவும் கூறியுள்ளார். அவர் வரும் காலத்திலும் அணிக்கு முக்கிய பங்காற்றுவார் என தெரிவித்த தோனி, தன்னுடைய ஓய்வு குறித்த அப்டேட்டையும் நேற்றைய போட்டியின்போது சூசகமாக தெரிவித்துவிட்டார்.
தோனி ஓய்வு எப்போது?
எம்எஸ் தோனி அடுத்தாண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவாரா? என்ற கேள்விக்கு அண்மையில் பதிலளித்த சுரேஷ் ரெய்னா, அடுத்த ஐபிஎல் போட்டியிலும் நிச்சயம் எம்எஸ்டி விளையாடுவார் என கூறினார். ஆனால், தோனி இதுகுறித்து பேசும்போது, ஐபிஎல் முடிந்து 10 மாதங்கள் இடைவெளி இருப்பதால் நான் ஐபிஎல் விளையாடுவது குறித்து அப்போது முடிவெடுப்பேன் என தெரிவித்துவிட்டார். இருப்பினும் நேற்றைய போட்டியின்போது டேனி மோரிசன் இதுகுறித்து கேட்டார். அடுத்த ஐபிஎல் போட்டியில் விளையாடுவீர்களா? என கேட்டார். அதற்கு பதில் அளித்த தோனி, அடுத்த போட்டியில் விளையாடுவேனா? என்பதே எனக்கு தெரியாது என கூறியுள்ளார். இதற்கு முன்பு தோனி இப்படியான பதில்களை கொடுத்ததில்லை. அதனால், தோனி ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து பரிசீலிக்க தொடங்கிவிட்டார் என ரசிகர்கள் அனுமானித்துள்ளனர். அதேநேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சொத்து என ஒரு பிளேயரையும் தோனி அடையாளம் காட்டியுள்ளார்.
சிஎஸ்கே அணியின் எதிர்காலம்
தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து பேசும்போது, அணிக்குள் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கிறது என்பது உண்மை தான். இருப்பினும் இன்றைய போட்டியில் சாம் கரன் சிறப்பாக பேட்டிங் செய்தார். அவருக்கு பக்கபலமாக டெவால்ட் ப்ரீவிஸ் சிறப்பாக பேட்டிங் ஆடினார். என்னைப் பொறுத்தவரை டெவால்ட் ப்ரீவிஸ் சிஎஸ்கே அணியின் சொத்தாக இருப்பார். அவர் மீது நிறைய நம்பிக்கை வைத்திருக்கிறோம் என கூறியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் நிலை
தற்போதைய சூழலில் சிஎஸ்கே மிகவும் பரிதாபமான நிலையில் இருக்கிறது. 10 போட்டிகளில் விளையாடியிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 10வது இடத்தில் இருக்கிறது. அத்துடன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 6 போட்டிகளில் விளையாடி 5ல் தோல்வியை சந்தித்திருக்கிறது. இதனால் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கு முன்பாக சிஎஸ்கே அணியில் பல அதிரடி மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிங்க: ‘ஏதோ 200 ஸ்ட்ரைக் ரேட் வச்சிருக்க மாதிரி பேசுறீங்க’.. மஞ்சுரேக்கரை விளாசிய கோலி சகோதரர்!
மேலும் படிங்க: csk vs pbks: ‘அடுத்த போட்டிக்கே வருவேனா எனத் தெரியாது’ – ஓய்வு குறித்து பேசுகிறாரா தோனி?