மேஷம் – குருப்பெயர்ச்சி பலன்கள்: மறைந்திருந்த திறமைகள் வெளிப்படும்; நன்மைகள் என்னென்ன?

1. இதுவரையிலும் உங்களைக் குழப்பியடித்த சிந்தனைகள், குழப்பங்கள் எல்லாம் உங்களைவிட்டு நீங்கும். துடிப்புடனும் தன்னம்பிக்கையுடனும் செயல்படுவீர்கள்.

2. குருபகவான் முயற்சி ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கிறார். அதனால் முயற்சிகளில் சிற்சில தடங்கல்கள், இளைய சகோதரர் வகையில் மனத்தாங்கல் ஏற்படும். எனினும் சமாளித்து மீள்வீர்கள். 

3. எந்தக் காரியமாக இருந்தாலும் இரண்டாவது திட்டம் ஒன்றை வைத்துக்கொள்ளுங்கள். குடும்பத்தில் சலசலப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பெரியோர் ஆலோசனை பக்கபலமாக இருக்கும். புதியவர்களை வீட்டுக்கு அழைத்து வரவேண்டாம்.

மேஷம்

4. நிகழும் குருப்பெயர்ச்சியில் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தைப் பார்ப்பதால், குடும்பத்தில் சிறு சிறு சர்ச்சைகள் ஏற்பட்டாலும், சந்தோஷத்துக்குக் குறைவிருக்காது. கணவன் – மனைவி  பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உற்றத் துணையாக விளங்குவதால், சுபிட்சம் கூடும். மறைந்திருந்த திறமைகள் வெளிப்படும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள்.

5. குருபகவான் 9-ம் இடத்தைப் பார்ப்பதால், தந்தை வழியில் சொத்துக்கள் சேரும். தந்தையாருடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கி பாசம் கூடும். 

6. சிலருக்கு, விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டா கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய கடன் பைசலா கும். மகனை, எதிர்பார்த்த கல்வி நிறுவனத்திலேயே படிக்க வைப்பீர்கள். மகளுக்கு உங்கள் அந்தஸ்துக்குத் தகுந்த மணமகன் அமைவார்.

7. குருபகவான் லாபஸ்தானத்தைப் பார்ப்பதால்,  சகல வகையிலும் லாபம் உண்டு. காரியத் தடைகள் விலகும். பிரபலங்களால் பாராட்டப்படுவீர்கள். மூத்த சகோதரர் உதவுவார். சொத்துப் பிரச்னைகள் சுமுகமாக முடியும். 

8. இந்த ராசியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் பரபரப்புடன் காணப்படுவார்கள். மேலிடத்தை அனுசரித்துப் போகவும். வாகனத்தை இயக்கும்போது செல்போனில் பேச வேண்டாம்.

9. வியாபாரத்தில் திடீர் லாபங்கள் சேர்ந்து, உங்களை மகிழ்விக்கும்.  புதிய முயற்சிகளில் நிச்சயம் வெற்றி கிடைக்கும். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். எனினும், வருங்கால சந்தை நிலவரத்தைக் கவனத்தில்கொண்டு புது முதலீடு செய்யுங்கள். கூட்டுத்தொழிலில் சில பிரச்னைகள் உண்டு. ஸ்டேஷனரி, ஹோட்டல், கமிஷன் வகைகளால் லாபம் அடைவீர்கள்.

மேஷம்

10. உத்தியோகத்தில் வேலைப்பளு உண்டு. சில பணிகளை ஒன்றுக்கு இரண்டு முறை அலைந்துதிரிந்து முடிக்கவேண்டியது வரும். சிலருக்கு, விரும்பத் தகாத இடமாற்றமும் வந்து சேரலாம். எனினும், எது நிகழ்ந்தாலும் முடிவில் உங்களுக்கு மிகப்பெரிய நன்மை அளிப்பதாகவே அமையும்.

11. ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப் பாக்கத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் வழியில், சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ளது ஞானமலை. வள்ளிதேவியுடன் முருகப்பெருமான் தங்கியிருந்த தலம் இது. அருணகிரிநாதருக்கு, தனது பாத தரிசனத்தை முருகன் காட்டியருளிய தலமும் இதுவே. ஏதேனும் ஒரு வியாழக்கிழமையில், இங்கு சென்று வழிபட்டு வாருங்கள்; நன்மைகள் நடக்கும்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.