கிழித்து வீசப்பட்ட ஆவணங்கள்; டாஸ்மாக் நிர்வாக இயக்குநரிடம் 6 மணி நேரம் அமலாக்​கத் துறை​ விசாரணை – பின்னணி என்ன?

சென்னை: டாஸ்​மாக்​கில் ரூ.1,000 கோடி முறை​கேடு நடந்​துள்​ள​தாக அமலாக்​கத் துறை குற்​றம்​சாட்​டிய நிலை​யில், டாஸ்​மாக் நிர்​வாக இயக்​குநரின் வீடு உட்பட சென்​னை​யில் 10-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் அமலாக்​கத் துறை​யினர் நேற்று சோதனை நடத்​தினர். அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அவரை அழைத்து சென்றும் தீவிர விசாரணை நடத்தினர். அவரது வீடு அருகே கிழித்து வீசப்பட்டநிலை​யில் கிடந்த சில ஆவணங்​களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

தமிழக அரசின் டாஸ்​மாக் நிறு​வனத்​துக்கு தனி​யார் நிறு​வனங்​களிடம் இருந்து மது​பானங்​கள் கொள்​முதல் செய்​யப்​படு​வ​தில் பல்​வேறு முறை​கேடு​கள் நடப்​ப​தாக​வும், இதில் வரி ஏய்ப்​பு, சட்​ட​விரோத பண பரிவர்த்​தனை நடந்​திருப்​ப​தாக​வும் அமலாக்​கத் துறைக்கு புகார்​கள் சென்​றன. இதன் அடிப்​படை​யில், சென்னை எழும்​பூரில் உள்ள டாஸ்​மாக் நிறுவன தலைமை அலு​வல​கம், அம்​பத்​தூர் தொழிற்​பேட்​டை​யில் உள்ள டாஸ்​மாக் குடோன், அப்​போது அமைச்​ச​ராக இருந்த செந்​தில் பாலாஜி​யின் நண்​பர் வீடு, அலு​வல​கங்​கள், திமுக எம்​.பி.ஜெகத்​ரட்​சக​னின் அக்​கார்டு மது​பான உற்​பத்தி நிறு​வனம், எஸ்​என்​ஜே,கால்​ஸ், எம்​ஜிஎம் உள்​ளிட்ட மது​பான உற்​பத்தி நிறு​வனங்​கள், அதன் ஆலைகளில் அமலாக்​கத் துறை கடந்த மார்ச் மாதம் தீவிர சோதனை நடத்​தி​யது.

சென்​னை, கரூர், கோவை, விழுப்​புரம், புதுக்​கோட்டை என 10-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் இந்த சோதனை நடத்​தப்​பட்​டது. இதில், பல்​வேறு முக்​கிய ஆவணங்​களை கைப்​பற்​றப்​பட்​டன. இதைத் தொடர்ந்​து, டாஸ்​மாக் நிறு​வனத்​துக்கு மது​பானங்​கள் கொள்​முதல் செய்​தது, பார் உரிமம் வழங்​கியது, மது​பானங்​களை மது​பான கடைகளுக்கு கொண்டு செல்​வதற்​கான போக்​கு​வரத்​துக்கு டெண்​டர் வழங்​கியது உள்​ளிட்​ட​வற்​றில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறை​கேடு நடந்​துள்​ள​தாக அமலாக்​கத்துறை அறிக்கை வெளி​யிட்​டது.

இதையடுத்து, அமலாக்​கத்துறை சோதனை நடத்​தி​யது சட்​ட​விரோதம் என அறிவிக்க கோரி, சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு மற்​றும் டாஸ்​மாக் நிர்​வாகம் சார்​பில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மனுவை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​ததால், உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு மேல்​முறை​யீடு செய்​துள்ளது.

இந்த சூழலில், சென்னை மணப்​பாக்​கம் சி.ஆர்​.புரத்​தில் உள்ள டாஸ்​மாக் நிர்​வாக இயக்​குநர் விசாகன் வீட்​டில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் நேற்று சோதனை நடத்​தினர். அப்​போது, ரூ.1,000 கோடி முறை​கேடு தொடர்​பான பல முக்​கிய ஆவணங்​களை அதி​காரி​கள் கைப்​பற்​றிய​தாக கூறப்​படு​கிறது. அதுதொடர்​பாக விசாக​னிட​மும், அவரது மனை​வி, மகனிட​மும் அதி​காரி​கள் விசா​ரணை நடத்​தினர்.

6 மணி நேரம் விசாரணை: அப்​போது, விசாகன் வீடு அருகே கிழித்து வீசப்பட்ட நிலையில் சில ஆவணங்கள் கிடந்​துள்​ளன. முக்கியமான வாட்​ஸ்​அப் உரை​யாடல்​கள் அதில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்​றி​யும் அவரிடம் தீவிர விசா​ரணை நடத்​தி​யுள்​ளனர். இந்த சோதனை சுமார் 6 மணி நேரத்​துக்கு மேல் நீடித்த நிலை​யில், விசாகன் மற்​றும் அவரது மனை​வியை அமலாக்​கத் துறை அலு​வல​கத்​துக்கு காரில் அழைத்து சென்​றனர். சிறிது நேரம் விசா​ரித்த பிறகு, அவரது மனை​வியை அதி​காரி​கள் அனுப்​பி​விட்​டனர்.

விசாக​னிடம் தொடர்ந்து விசா​ரணை நடந்​தது. அவரது வீட்​டில் கைப்​பற்​றிய ஆவணங்​கள், கிழித்து வீசப்​பட்ட ஆவணங்கள் குறித்து அவரிடம் தொடர்ந்து விசா​ரணை மேற்​கொண்​டனர். இந்த விசாரணை நேற்று இரவு வரை நீடித்தது. இதே​போல, சென்னை ஆழ்​வார்​பேட்​டை​யில் உள்ள அடுக்​கு​மாடி குடி​யிருப்​பில் வசிக்​கும் பிரபல திரைப்பட தயாரிப்​பாளர் டான் பிக்​சர்ஸ் ஆகாஷ் பாஸ்​கரன் வீட்​டிலும் அமலாக்​கத்​ துறை அதி​காரி​கள் நேற்று காலை முதல்சோதனை நடத்​தினர். இவர் பள்​ளிக்​கல்வி துறை அமைச்​சர் அன்​பில் மகேஸின் உறவினர் என்று கூறப்​படு​கிறது.

திரு​வல்​லிக்​கேணி​யில் உள்ள தொழில​திபர் தேவகு​மார், சாஸ்​திரி நகரில் உள்ள மின்​வாரிய ஒப்​பந்​த​தா​ரர் ராஜேஷ்கு​மார், சேத்​துப்​பட்டு ஜெக​நாத​புரத்​தில் உள்ள பாபு, தியாக​ராய நகரில் உள்ள கேசவன் ஆகியோரது வீடு​கள், சூளைமேடு ராஜகீழ வீதி​யில் உள்ள எஸ்​என்ஜே மது​பான நிறுவன அலு​வல​கம் உட்பட சென்​னை​யில் நேற்று ஒரே நாளில் 10-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் சோதனை நடத்​தினர். குறிப்​பாக, டாஸ்​மாக் தொடர்​பான அதி​காரி​கள், ஒப்​பந்​த​தா​ரர்​கள், அவர்​களுக்கு நெருக்​க​மானவர்​களின் வீடு, அலு​வல​கங்​களில் சோதனை நடத்​தப்​பட்​டுள்​ளது. இதில், டாஸ்​மாக்​கில் நடந்​துள்​ள​தாக கூறப்​படும் ரூ.1,000 கோடி முறை​கேடு தொடர்​பான பல்​வேறு ஆவணங்​கள், சட்​ட​விரோத பண பரிவர்த்​தனை தொடர்​பான ஆவணங்​கள், டிஜிட்​டல் ஆவணங்​கள் சிக்​கிய​தாக கூறப்​படு​கிறது. எனினும், சோதனை முடிந்த பிறகே முழு விவரங்​களை வெளி​யிட முடி​யும்​ என்​று அமலாக்​கத்​ துறை அதி​காரிகள்​ தெரிவித்​தனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.