சென்னை; டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் என கற்பனை செய்தியை அமலாக்கத்துறை பரப்புகிறது என டாஸ்மாக் துறை அமைச்சர் முத்துசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆதரவாக தமிழக அரசு அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் மேற்கொண்டு துணை நிற்கும் என்றார். சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, கடந்த மார்ச் 6 முதல், 8ம் தேதி வரை, சென்னை எழும்பூரில் உள்ள ‘டாஸ்மாக்’ தலைமை அலுவலகம் மற்றும் எஸ்.என்.ஜே., உள்ளிட்ட மதுபான நிறுவனங்கள், மதுபான ஆலைகளில், அமலாக்கத்துறை அதிகாரிகள் […]
