ஸ்டெல்த் ஃபைட்டர் ஜெட்டுகளை சீனா பாகிஸ்தானிற்கு கூடிய விரைவில் டெலிவரி செய்ய உள்ளது. இந்த நிலையில், இந்திய தனது சொந்த தயாரிப்பிலேயே ஸ்டெல்த் (Stealth Fighter Jet) ஃபைட்டர் ஜெட்டுகளை உருவாக்க உள்ளது. இதற்கு இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஸ்டெல்த் ஃபைட்டர் ஜெட் என்றால் என்ன?
இது ராணுவ சம்பந்தப்பட்ட போர் விமானம் ஆகும். இந்த விமானத்தை ரேடார் உள்ளிட்ட எந்தக் கருவிகளாலும் கண்டுபிடிக்க முடியாது.
ஸ்டெல்த் என்றால் ஆங்கிலத்தில் ‘திருட்டுத்தனம்’ என்று பொருள்படும். ஆக, இது பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ரேடர் கண்கள், மனித கண்கள் ஆகியவற்றில் இருந்து எளிதாக தப்பும், இது சத்தம் கூட எழுப்பாது. அதனால், இந்த ஜெட்டை எதிரிகள் கண்டுபிடிப்பது மிக மிக கடினம்.

இந்தியாவில் உருவாக்கப்பட உள்ள இந்த ஃபைட்டர் ஜெட்டுகளின் சிறப்பம்சம் என்ன?
இது இந்தியாவின் முதல் ஸ்டெல்த் விமானமாக அமையும். இரு இன்ஜீன்களை கொண்டு இயங்க உள்ள இந்த ஃபைட்டர் ஜெட், இந்தியாவின் ஐந்தாவது தலைமுறை ராணுவ விமானமாக இருக்கும். இதை வானூர்தி மேம்பாட்டு நிறுவனம் (ADA) உருவாக்கும்.
இந்த ஜெட்டின் மாடலை உருவாக்க கூடிய விரைவில், இந்த நிறுவனம் அரசாங்க மற்றும் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களிடம் டெண்டர் விடப்படும். இதில் இந்திய நிறுவனங்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.
ஏன் தனியார் நிறுவனங்கள்?
இது இந்தியாவின் டாப் பாதுகாப்புத் துறை கமிட்டியின் பரிந்துரை ஆகும். இந்தியாவின் முக்கிய ஃபைட்டர் ஜெட் தயாரிப்பு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) ஏற்கெனவே பணிச்சுமையால் தடுமாறி கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், அதன் பணிச்சுமையை குறைக்கவும், தனியார் நிறுவனங்களின் வருகையை பாதுகாப்புத் துறையில் ஊக்கவிக்கவும் தான் இந்த ஏற்பாடு.

திடீரென ஏன்?
இப்போது தான் இந்தியா – பாகிஸ்தான் இடையே தாக்குதல் முடிந்துள்ளது. ஆனால், அது மீண்டும் எழாதா என்பது மில்லியன் டாலர் கேள்வி. சீனாவிற்கும், இந்தியாவிற்கும் மோதல் போக்கு வருவதும், போவதுமாக உள்ளது.
சீனா வேக வேகமாக தனது ராணுவ பலத்தைக் கூட்டிகொண்டே போகிறது. கூடவே தனது ஆரூயிர் நண்பனான பாகிஸ்தானுக்கும் ராணுவ தளவாடங்களை விற்று வருகிறது. சீனா வழங்கிய ஸ்டெல்த் ஃபைட்டர் ஜெட் ஏற்கனவே பாகிஸ்தானிடம் உள்ளது.
இதனால், இந்தியா அதன் பலத்தை மேலும் உயர்த்த வேண்டியதாக உள்ளது. அந்த நடவடிக்கைகளில் ஒரு பகுதி தான் இந்த ‘ஸ்டீல்த் ஃபைட்டர் ஜெட்’.