ஜியோ பயனர்களுக்கு குட் நியூஸ்.. 20 ஜிபி டேட்டா, ஜியோ ஹாட்ஸ்டார் இலவசம்

Jio 20GB Extra Data Plan: ஜியோ நிறுவனம் தனது பயனர்களுக்காக அவ்வபோது பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. 46 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது ஜியோ நிறுவனம் தற்போது மிகச்சிறந்த திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. இதில் ஜியோ நிறுவனம் பயனர்களுக்கு 20 ஜிபி கூடுதல் டேட்டாவை வழங்கும் ஒரு திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளது.

பெரும்பாலான பயனர்கள் இணையத்தை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் அதிக இணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு ஜியோ ஒரு சிறந்த திட்டத்தைக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தில் நிறுவனம் பயனர்களுக்கு 20 ஜிபி கூடுதல் டேட்டாவை வழங்குகிறது. இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை எவ்வளவு, இந்த திட்டத்தின் மூலம் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இப்போது தெரிந்துக்கொள்வோம்.

ஜியோவின் ரூ.749 ரீசார்ஜ் திட்டம் | Jio’s Rs. 749 recharge plan:
ஜியோவின் இந்த ரீசார்ஜ் அதிக இணையத்தைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு சிறந்த விருப்பமாக இருக்கும் என்று நிரூபிக்க முடியும். அதாவது, OTT தளங்களில் அதிக வீடியோக்களைப் பார்த்து நீங்கள் மகிழ்ச்சியுடன் இருக்கலாம்.

ஜியோவின் இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ.749 ஆகும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலத்தை பற்றி பேசுகையில், இந்த திட்டம் 72 நாட்கள் வேலிடிட்டி காலத்துடன் பயனருக்குக் கிடைக்கிறது. அதாவது, 72 நாட்களுக்கு நீங்கள் அனைத்து உள்ளூர் மற்றும் எஸ்டிடி நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பைச் செய்துக் கொள்ளலாம். இந்த ரீசார்ஜ் திட்டத்தின் மூலம், பயனர் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் அனுப்பும் வசதியையும் பெறுவார்கள். 

டேட்டாவைப் பற்றிப் பேசுகையில், இந்தத் திட்டத்தில் மொத்தம் 164 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதேபோல் இந்தத் திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், பயனருக்கு 20 ஜிபி கூடுதல் டேட்டா கிடைக்கிறது. கூடுதல் நன்மைகளைப் பற்றிப் பேசுகையில், இந்த ரீசார்ஜ் திட்டத்துடன் 90 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டாரின் இலவச சந்தாவையும் பயனர்கள் பெறுவார்கள். இது தவிர, பயனர்கள் 50 ஜிபி AI கிளவுட் சேமிப்பகத்தையும் பெறுவார்கள். இது மட்டுமல்லாமல், இந்தத் திட்டத்தில் பயனர்கள் ஜியோ டிவிக்கான இலவச அணுகலையும் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ ரூ.629 ப்ரீபெய்ட் திட்டம் | Jio Rs. 629 prepaid plan:
இப்போது ஜியோ ரூ.629 ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி பேசுகையில் இதில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். மொத்தம் 112ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினசரி 2GB டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும். அதேபோல் 90 நாட்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் சந்தா வழங்குகிறது. மேலும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கும். இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகிய சலுகைகளும் இந்த திட்டத்தில் உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.