புரோ ஆக்கி லீக்: பெல்ஜியத்திடம் தோல்வி கண்ட இந்திய மகளிர் அணி

ஆன்ட்வெர்ப்,

9 அணிகள் இடையிலான மகளிருக்கான புரோ ஆக்கி லீக்கில் ஐரோப்பிய சுற்றில் இந்திய அணி தகிடுதத்தம் போடுகிறது. பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப்பில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா 0-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வி அடைந்தது. ஐரோப்பிய சுற்றில் இந்திய அணி தொடர்ச்சியாக சந்தித்த 6-வது தோல்வி இதுவாகும்.

முன்னதாக ஆஸ்திரேலியா, அர்ஜென்டினாவிடம் தலா 2 முறையும், பெல்ஜியத்திடம் ஒரு தடவையும் தோற்று இருந்தது. மொத்தத்தில் இந்திய பெண்கள் அணி இதுவரை 14 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 11 தோல்வி என 10 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. இதனால் புரோ லீக்கில் இருந்து தகுதி இறக்கம் செய்யப்படும் சிக்கலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஆண்கள் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை தோற்கடித்து முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்தது. ஐரோப்பிய சுற்றில் தொடர்ந்து 7 ஆட்டங்களில் தோல்வியை தழுவிய இருந்த இந்திய அணிக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.