Aadhaar mobile number update : ஆதார் சார்ந்த சேவைகளை ஆன்லைனில் பயன்படுத்த, உங்கள் மொபைல் எண் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில், ஆன்லைன் பரிவர்த்தனைகளின் போது OTP (ஒரு முறை கடவுச்சொல்) உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கே அனுப்பப்படும். உங்கள் பழைய மொபைல் எண் பயன்பாட்டில் இல்லை என்றால் அல்லது மாற்ற விரும்பினால், ஆதார் என்ரோல்மென்ட் சென்டரில் பயோமெட்ரிக் சரிபார்ப்பு மூலம் மட்டுமே இதை மாற்றலாம்.
ஆதாரில் மொபைல் எண் மாற்றுவதற்கான வழிமுறைகள்:
1. ஆன்லைனில் அபாயிண்ட்மென்ட் புக்கிங் (விருப்பத்தேர்வு)
ஆதார் சேவா கேந்திரத்தில் நேரடியாக செல்வதற்கு முன், ஆன்லைனில் அபாயிண்ட்மென்ட் எடுக்கலாம்.
– UIDAI அதிகாரப்பூர்வ வலைத்தளம் செல்லவும்.
– “My Aadhaar” > “Get Aadhaar” > “Book an Appointment” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
– உங்கள் நகரம் அல்லது இடத்தை உள்ளிட்டு “Proceed to Book Appointment” கிளிக் செய்யவும்.
– உங்கள் தற்போதைய மொபைல் எண் மற்றும் CAPTCHA குறியீட்டை உள்ளிட்டு “Generate OTP” கிளிக் செய்யவும்.
– OTP பெற்ற பிறகு, அதை உள்ளிட்டு “Verify OTP” செய்யவும்.
– பின்வரும் விவரங்களை நிரப்பவும்: ஆதார் எண், முழு பெயர் (ஆதாரில் உள்ளபடி), பிறந்த தேதி, மாநிலம் & நகரம், விருப்பமான ஆதார் சேவா மையம்,
– “Update Mobile Number” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
– விரும்பிய தேதி மற்றும் நேரத்தைத் தேர்ந்தெடுத்து “Submit” செய்யவும்.
2. ஆதார் என்ரோல்மென்ட் சென்டரில் பயோமெட்ரிக் சரிபார்ப்பு
– உங்கள் அபாயிண்ட்மென்ட் தேதியில் ஆதார் சேவா கேந்திரத்திற்குச் செல்லவும்.
– உங்கள் கைரேகை மற்றும் ஐரிஸ் ஸ்கேன் செய்யப்படும்.
– புதிய மொபைல் எண்ணை சமர்ப்பிக்கவும்.
– ரூ. 50 கட்டணம் செலுத்த வேண்டும்.
– அக்கினாலெட்ஜ்மென்ட் ரசீது (URN எண்ணுடன்) வழங்கப்படும்.
3. மொபைல் எண் மாற்றத்தை டிராக் செய்தல்
– UIDAI டிராக்கிங் பக்கம் செல்லவும்.
– உங்கள் URN எண்ணை உள்ளிட்டு நிலையை சரிபார்க்கலாம்.
– ஆதாரில் மொபைல் எண்ணை நேரடியாக ஆன்லைனில் மாற்ற முடியாது.
– ஆதார் சேவா கேந்திரத்தில் மட்டுமே இந்த மாற்றம் செய்ய முடியும்.
– மாற்றியமைத்த பிறகு, 72 மணி நேரத்திற்குள் புதிய எண்ணுக்கு OTP கிடைக்கும்.
– அதை உள்ளிட்டால் மொபைல் எண் மாறுவது உறுதியாகும்.