டிவிஎஸ் மோட்டார் இந்தியாவின் அதிக மின்சார ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வரும் நிலையில் ஐக்யூப் மாடலில் கூடுதலாக புதிய 3.1Kwh பேட்டரி பேக் கொண்ட வேரியண்ட் 121கிமீ ரூ. 1.17 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கின்றது.
முன்பாக விற்பனையில் உள்ள 2.2kwh, 3.5kwh போன்ற வேரியண்டுகளுக்கு நடுவில் வந்துள்ள 3.1 Kwh மூலம் சமீபத்தில் வந்த சேட்டக் 3001 மாடலுக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
அதிகபட்ச வேகம் மணிக்கு 82 கிமீ எட்டும் ஐக்யூப் 3.1Kwh பேட்டரி பேக் வேரியண்டின் IDC சான்றிதழ் 121கிமீ என உறுதிப்படுத்தப்பட்டு, 3Kw, 33NM டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில் மற்ற மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை. 0-80 % சார்ஜிங் பெற 2.45 மணி நேரம் போதுமானதாக அமைந்துள்ளது.
முன்புறத்தில் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிரம் உடன் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் கொண்டு, 90/90-12 மற்றும் பின்புறத்தில் 90/90-12 டயருடன் சஸ்பென்ஷன் அமைப்பில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் உடன் பின்புறத்தில் மோனோஷாக் கொண்டுள்ளது.
இந்த மாடலுக்கு போட்டியாக விடா விஎக்ஸ்2 உட்பட ரிஸ்டா, சேட்டக், ஓலா உள்ளிட்ட மாடல்கள் கிடைக்கின்றது.